பிரபாஸின் அந்த பிரம்மாண்ட படத்தின் ஷூட்டிங்கும் ஓவராம்.. ராமராக கூடிய சீக்கிரமே தரிசனம் தர போறாரு!
சென்னை: பாகுபலி படம் மூலம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி பாலிவுட் நடிகர்களுக்கு பீதியை கிளப்பிய நடிகர் பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
தானாஜி படத்தை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், சைஃப் அலி கான், கீர்த்தி சனோன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ஆதிபுருஷ்.
ராமாயண இதிகாச கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது.

பாலிவுட்டை மிரள வைத்த பிரபாஸ்
இயக்குநர் ராஜமெளலியின் பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் வெளியாகி இந்தியாவிலேயே மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்த பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் எல்லாம் பயத்தில் ந்டுங்க ஆரம்பித்து விட்டனர். பாகுபலி படத்திற்கு பிறகு டோலிவுட் நடிகர் பிரபாஸை இயக்க பாலிவுட் இயக்குநர்கள் ஆர்வம் காட்டத் தொடங்கி விட்டனர்.

ராமராக பிரபாஸ்
பாகுபலி படத்தில் தனது நடிப்பால் மிரட்டிய நடிகர் பிரபாஸ் ஆதிபுருஷ் திரைப்படத்தில் ராமராக தரிசனம் தர காத்திருக்கிறார். பாகுபலி படத்திலேயே அனுஷ்காவுக்கு அம்பு விட சொல்லிக் கொடுத்த பிரபாஸ், இந்த படத்திற்காக பிரத்யேகமாக வில் வித்தை பயிற்சியை எல்லாம் மேற்கொண்டு நடித்துள்ளார்.

ஆதிபுருஷ் ஷூட்டிங் ஓவர்
ராமாயண இதிகாசத்தை மையமாக கொண்டு உருவாகி வந்த ஆதிபுருஷ் திரைப்படத்தின் ஷூட்டிங் அதற்குள் முடிந்து விட்டதாக இயக்குநர் ஓம் ராவத் நடிகர் பிரபாஸ் மற்றும் நடிகை கீர்த்தி சனோன் உள்ளிட்ட படக்குழுவினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

103 நாட்கள்
பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகி வரும் ஆதிபுருஷ் வெறும் 103 நாட்களுக்குள் அதாவது மூன்றரை மாதத்திற்குள் முடிக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் ஓம் ராவத் தெரிவித்துள்ளார். அத்தனை பெரிய ராமாயண கதையை எப்படி இவ்வளவு சீக்கிரமாக எடுத்துள்ளனர் என்றும் எந்த காட்சிகள் ஹைலைட்டாக காட்டப்படும் என்றும் ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

இதுவும் சம்மருக்கா
ஏற்கனவே அடுத்த ஆண்டு சம்மருக்கு பொன்னியின் செல்வன், விஜய்யின் பீஸ்ட், கேஜிஎஃப் 2 என ஏகப்பட்ட பெரிய பட்ஜெட் படங்கள் வெளிவர காத்திருக்கின்றன. இந்நிலையில், ஆதிபுருஷ் படத்தின் ஷூட்டிங்கும் முடிவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைவில் முடுக்கி விடப்பட்டு இந்த படமும் வரும் சம்மருக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரிபிள் ட்ரீட்
ஆதிபுருஷ் திரைப்படத்துக்கு முன்னதாக நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி உள்ள ராதே ஷ்யாம் மற்றும் சலார் திரைப்படங்கள் அடுத்த ஆண்டு அடுத்தடுத்து வெளியாக காத்திருக்கின்றன. அடுத்த ஆண்டு பிரபாஸ் ரசிகர்களுக்கு இதன் மூலம் டிரிபிள் ட்ரீட் காத்திருக்கிறது என்பது கன்ஃபார்ம் ஆகி உள்ளது.


Click it and Unblock the Notifications