“ராதே ஷ்யாம்’’ பிரபாஸ் வாங்கிய சம்பளம்… திகைத்துப்போன ரசிகர்கள் !
சென்னை : பான் இந்திய ஹீரோவாக மாறி உள்ள பிரபாஸ் ராதே ஷ்யாம் திரைப்படத்திற்காக வாங்கி உள்ள சம்பளம் அவரது ரசிகர்களை திகைப்பில் ஆழ்த்தி உள்ளது.
தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என பல மொழிகளில் வரும் மார்ச் 11 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது.
ராதே ஷ்யாம் திரைப்படம் தமிழகத்தில் மட்டும 175 திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

பாகுபலி
பாகுபலி 1 மற்றும் 2 திரைப்படத்தின் மூலம் டோலிவுட்டின் டார்லிங் என்றும், பெரபெல் ஸ்டார் என்றும் ரசிகர்கள் பிரபாஸை கொண்டாடி வருகிறார்கள். பாகுபலி படத்தில் அவர் நடித்த மகேந்திர பாகுபலி கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. ஒவ்வொரு காட்சியின் போதும் பிரபாஸின் நடிப்பு மெய்சிலிர்க்க வைக்கும்.

வசூலை வாரிக் குவித்தது
பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் உலகமே உற்று நோக்கும் நாயகனாக மாறிவிட்டார். அடுத்ததாக சாஹோ என்ற பிரம்மாண்டமான படத்தில் நடித்து மிரட்டி இருந்தார். அந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெற்று பிரபாஸிற்கு பெயரை பெற்றுத்தந்து, பாக்ஸ் ஆபிசில் வசூலை வாரிக் குவித்தது.

ராதே ஷ்யாம்
சாஹோ படத்திற்குப் பிறகு பிரபாஸ், ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ராதே ஷ்யாம் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க யூவி கிரியேஷன்ஸ் பேனரில் வம்சி மற்றும் பிரமோத் தயாரித்துள்ளனர். ஆஸ்ட்ரோ த்ரில்லர் ப்ளஸ் காதல் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் பாக்யஸ்ரீ, சச்சின் கடேகர், முரளி சர்மா என பலரும் நடித்துள்ளனர்.

மார்ச் 11ந் தேதி ரிலீஸ்
கைரேகை நிபுணராக வித்தியாசமான கதாபாத்திரத்தில் பிரபாஸ் கவனம் ஈர்க்கிறார். சூத்திரதாரியாக நடிகர் அமிதாப் பச்சன் குரல் கொடுத்திருப்பது, அதிநவீன விஷுவல் எஃபெக்ட்ஸ்கள், இத்தாலி, ஜார்ஜியா மற்றும் ஹைதராபாத்தில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. மார்ச் 11ந் தேதி வெளியாக உள்ள இத்திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 175 திரையரங்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
Recommended Video

பிரபாஸ்னா சும்மாவா
இந்நிலையில், ராதே ஷ்யாம் திரைப்படத்திற்காக பிரபாஸ் 100 கோடி ரூபாயை சம்பளமாக வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பளத்தை கேட்டு ஒரு சில ரசிகர்கள் திகைத்துப்போனாலும், உலகமே உற்றுநோக்கும் நடிகருக்கு இந்த சம்பளமே குறைவுதான் என்றும், பிரபாஸ்னா சும்மாவா என்றும் ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











