Prabhas: KGF நிறுவனத்துடன் அடுத்தடுத்து 3 படங்களில் கமிட்டான பிரபாஸ்.. முதல்ல எந்தப்படம் தெரியுமா?

ஐதராபாத்: நடிகர் பிரபாஸ் அடுத்தடுத்து முன்னணி தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுடன் இணைந்து படங்களை கொடுத்து வருகிறார். பாகுபலி, பாகுபலி படங்கள்மூலம் இவர் சர்வதேச அளவில் மிகப்பெரிய ஹீரோவாகவும் பான் இந்தியா ஸ்டாராகவும் தன்னை மாற்றிக் கொண்டுள்ளார். இவரது படங்கள் அடுத்தடுத்து 1000 கோடி ரூபாய் கிளப்களில் இணைந்து வருகின்றன.

சமீபத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான கல்கி 2898 AD படமும் 1000 கோடி கிளப்பில் இணைந்து மாஸ் காட்டியது. இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான வேலைகள் தற்போது துவங்கியுள்ள நிலையில், விரைவில் சூட்டிங் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே கேஜிஎப் படங்களை கொடுதத ஹோம்பாலே நிறுவனத்துடன் அடுத்தடுத்து 3 படங்களில் நடிக்க பிரபாஸ் கமிட்டாகியுள்ளார்.

prabhas salaar 2 hombale films


நடிகர் பிரபாஸ்: நடிகர் பிரபாஸ் சர்வதேச அளவில் கவனம் பெற்ற நடிகராக காணப்படுகிறார். இவரது அடுத்தடுத்த படங்கள் அதிகமான கவனத்தை ஈர்த்து வருவதுடன் 1000 கோடி கிளப்பிலும் இணைந்து வருகின்றன. ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி, பாகுபலி 2 படங்களில் நடித்ததன்மூலம் தன்னை பான் இந்தியா ஸ்டாராக மாற்றிக் கொண்டுள்ள பிரபாஸ், அதை அடுத்தடுத்த படங்களிலும் தொடர்ந்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான கல்கி 2898 ஏடி படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து 1000 கோடி கிளப்பில் இணைந்திருந்தது. இந்தப் படத்தை நாக் அஸ்வின் இயக்கியிருந்த நிலையில் கமல்ஹாசன், அமிதாப் பச்சன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படத்தில் இணைந்திருந்தனர்.

ஹோம்பாலே -பிரபாஸ் ஒப்பந்தம்: முன்னதாக இவரது நடிப்பில் வெளியான ராதே ஷ்யாம், சாஹோ, சலார் படங்களும் வசூலில் சிறப்பாக அமைந்த நிலையில், தற்போது தி ராஜா சாப் என்ற படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். இதனிடையே, அடுத்தடுத்து ஹோம்பாலா பிலிம்ஸ் நிறுவனத்துடன் பிரபாஸ் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் ஹோம்பாலே நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் முதல் படமாக சலார் 2 படம் துவங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் முதல் பாகத்தை இயக்கிய பிரஷாந்த் நீல் இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து 3 படங்கள்: இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் ஒரு படம், ஹனுமான் படத்தை இயக்கிய பிரஷாந்த் வர்மா இயக்கத்தில் மற்றொரு படமும் என அடுத்தடுத்த படங்களில் பிரபாஸ் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இதில் சலார் 2 படத்தை மட்டும் ஹோம்பாலே நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. 2026ம் ஆண்டு முதல் அடுத்தடுத்து 3 ஆண்டுகளில் பிரபாஸ் -ஹோம்பாலே கூட்டணியில் 3 படங்கள் வெளியாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படங்கள் இல்லாமல் கேஜிஎஃப் 3 மற்றும் காந்தாரா 2 படங்களையும் ஹோம்பாலே நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சலார் சிறப்பான வெற்றி: முன்னதாக பிரபாஸ் -ஹோம்பாலே கூட்டணியில் வெளியான சலார் படம் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ஆக்ஷன் படமாக உருவாகியிருந்தது. கேஜிஎப் படம் போலவே அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் இந்தப் படம் அமைந்திருந்தது. பாகுபலி படங்களை தொடர்ந்து பிரபாஸிற்கு சில படங்கள் சரியாக அமையாத நிலையில் விமர்சன ரீதியாகவும் வசூல்ரீதியாகவும் சலார் படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் குறித்து தற்போது ஹோம்பாலா நிறுவனம் அறிவித்துள்ளது ரசிகர்களை உற்சாகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X