முகம் தெரியாத மனிதர்களின் பாராட்டு... பொன் மாணிக்கவேல் குறித்து நெகிழ்ந்த பிரபுதேவா

சென்னை : நடிகர் பிரபுதேவா முதல் முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்து வெளியாகியுள்ள படம் பொன் மாணிக்கவேல்.

Recommended Video

ரசிகர்கள்னாலே பிரச்சனைதான் | Actor Prabhu Deva Speech | Thael Movie Audio Launch | Filmibeat tamil

உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ள நிலையில், நடிகர் பிரபுதேவா படம் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

நடிகர் பிரபுதேவா

நடிகர் பிரபுதேவா

நடிகர் பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் பொன் மாணிக்கவேல். உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார் பிரபுதேவா.

காவல்துறை அதிகாரி

காவல்துறை அதிகாரி

நீதிபதி ஒருவர் மர்மமான முறையில் கொல்லப்பட அதுகுறித்து விசாரிக்கவரும் காவல்துறை அதிகாரியான பிரபுதேவா சந்திக்கும் சிக்கல்கள் குறித்து இந்தப் படம் பேசுகிறது. படத்தில் சுரேஷ் மேனன், மறைந்த இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்டவர்களின் கதாபாத்திரங்கள் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

சொதப்பிய திரைக்கதை

சொதப்பிய திரைக்கதை

ஆயினும் சிறப்பான திரைக்கதையுடன் பயணித்திருக்க வேண்டிய படம் தாறுமாறாக வேறெங்கெங்கோ செல்வதால் ரசிகர்களின் நிதானத்தை சோதிப்பதாக அமைந்துள்ளது. படம் குறித்த கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் தற்போது படம் குறித்து பிரபுதேவா தனது ட்விட்டர் பக்கத்தில் மனம் திறந்துள்ளார்.

ட்விட்டரில் பேசிய பிரபுதேவா

வீடியோ மூலம் பேசியுள்ள அவர், படத்திற்கான ஆரம்பக்கட்ட விமர்சனங்கள் குறித்தும் பேசியுள்ளார். ஆனால் அடுத்தடுத்த நாட்களில் தனது அபிமானிகள் படம் சிறப்பாக அமைந்துள்ளதாக தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். தான் படத்தை பார்த்ததாகவும் படம் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முகம் தெரியாதவர்களின் விமர்சனம்

முகம் தெரியாதவர்களின் விமர்சனம்

இந்நிலையில் தான் ஒரு பயணத்தை மேற்கொண்டபோது தனக்கு முற்றிலும் புதியவர் ஒருவர் படம் சிறப்பாக அமைந்துள்ளதாக கூறியதை அடுத்து படம் குறித்த நம்பிக்கை தனக்கு எழுந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். படம் சில தினங்களுக்கு முன்பு ஓடிடியில் வெளியாகியுள்ளது.

படத்தை கண்டிப்பாக பாருங்க

படத்தை கண்டிப்பாக பாருங்க

இந்நிலையில் படத்தை ரசிகர்கள் பார்க்கும்படியும் கண்டிப்பாக அவர்களுக்கு பிடிக்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். அடுத்தடுத்த படங்களில் நடித்துவரும் பிரபுதேவா முதல்முறையாக காவல் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளது குறித்து ரசிகர்கள் பாராட்டு தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X