Don't Miss!
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Technology
Oneplus Nord 2T 5G வந்தாச்சு: பட்ஜெட் விலையில் நச்சுனு அம்சம்- கொடுக்குற காசுக்கு தகுமா?
- News
வருமான வரித்துறையிடம் எனக்கு லவ் லெட்டர் வந்திருக்கிறது.. ஐடி நோட்டீஸ் குறித்து சரத்பவார் கிண்டல்
- Lifestyle
மிதுனம் செல்லும் புதனால் அடுத்த 15 நாட்கள் இந்த ராசிகளுக்கு செம சூப்பரா இருக்கப் போகுது...
- Finance
பிளாஸ்டிக் தடையால் அடித்தது ஜாக்பாட்: ஆனால் காத்திருக்கும் மிகப்பெரிய சவால்!
- Automobiles
ஆவ்சம்... இந்தியாவில் வெளியீட்டை பெற்றது டொயோட்டா ஹைரைடர்... ஸ்ட்ராங் ஹைபிரிட் அம்சத்துடன் வந்திருக்கு!
- Sports
யாரும் எடுக்காத துணிச்சல் முடிவு..? இந்திய ப்ளேயிங் 11ல் அஸ்வினின் நிலை என்ன?- டிராவிட்டின் ஐடியா
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
இந்திய மைக்கேல் ஜாக்சனுக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்து... ட்ரெண்டிங்கில் பிரபுதேவா!
சென்னை :நடிகர், நடன இயக்குநர், இயக்குநர் என பன்முக திறமையை கொண்டவர் பிரபுதேவா. சமீப காலங்களில் அவர் தமிழ் சினிமாவில் அதிகமான கவனத்தை செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
விஜய்
டிவி
விருதுகள்
வந்தாச்சு...சிறந்த
சீரியல்,
சிறந்த
நடிகர்
யார்
தெரியுமா?

நடன இயக்குநர் பிரபுதேவா
தமிழில் சிறப்பான பல படங்களுக்கு நடனத்தை அமைத்து ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு காரணமாக அமைந்தவர் பிரபுதேவா. ஒரு கட்டத்தில் படங்களில் ஒரு பாடல்களுக்கு நடனமாடி மிகுந்த வரவேற்பை பெற்ற பிரபுதேவா ஹீரோவாக நடித்து பல படங்களில் நடித்துள்ளார்.

பாலிவுட்டில் பிரபுதேவா
இவரது புகழ் இவரை பாலிவுட்டிற்கும் அழைத்து சென்றது. அங்கும் முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கி வெற்றிக் கொடி நாட்டிய பிரபுதேவா, தமிழிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்திய மைக்கேல் ஜாக்சன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.

தேள் படத்தில் பிரபுதேவா
தொடர்ந்து தமிழிலும் இயக்குநராகவும் பிரபுதேவாவை பார்க்க முடிகிறது. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான தேள் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி உள்ளது. தொடர்ந்து பொய்க்கால் குதிரை, முசாசி, ப்ளாஷ்பேக் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

புனீத்தின் இறுதிப்படத்தில் நடனம்
சமீபத்தில் மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரின் கடைசி படத்தில் அவருக்கு நடன இயக்குநராகவும் பிரபுதேவா பணியாற்றியுள்ளார். அவருடன் இணைந்து நடனமும் ஆடியுள்ளார். மேலும் இவரது நடனத்திற்காக இவருக்கு பத்மஸ்ரீ பட்டமும் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பன்முகத் திறமை
தனக்கு கொடுக்கப்படும் அனைத்து கதாபாத்திரங்களையும் பின்னி பெடலெடுப்பார் பிரபுதேவா. இதேபோல நடன இயக்கத்தையும் தற்போது வரை செய்து வருகிறார். இயக்கத்தையும் விட்டுவிடவில்லை. தொடர்ந்து சிறப்பான பல விஷயங்களை செய்துவரும் பிரபு தேவா இன்றைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

பிறந்தநாள் கொண்டாட்டம்
இதையொட்டி ட்விட்டரில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மேலும் ட்விட்டரில் பிரபுதேவா பிறந்தநாளின் ஹேஷ்டேக் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. அவர் நடித்துவரும் படங்களின் படக்குழுவினர் பிரபுதேவாவிற்கு தொடர்ந்து பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.