Don't Miss!
- News
அந்த 7 மணி நேரம்.. மேஜையில் பைல்களை எடுத்து வைத்த எடப்பாடி.. யார் அந்த ஒருவர்? பறந்து வந்த உத்தரவு
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Sports
ஹர்திக் பாண்டியா முன் காத்திருக்கும் சவால்..ஒரு தவறு செய்தால் மொத்தமாக குளோஸ்..பாடம் கற்பாரா கேப்டன்?
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
நயன் விக்கியை தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மகனுடன் தரிசனம் செய்த நடிகர் பிரபு!
திருப்பதி: நடிகர் பிரபு தனது மகனும் நடிகருமான விக்ரம் பிரபுவுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்துள்ளார்.
Recommended Video
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரபு. 64 வதயான நடிகர் பிரபு சுமார் 40 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துள்ளார்.
இன்னைக்கு வெயிட்டான சம்பவம் இருக்கு… ப்ரோமோவை பார்த்து மிரளும் ரசிகர்கள் !
ஹீரோவாக பல வெற்றி படங்களை கொடுத்துள்ள நடிகர் பிரபு, தற்போது வயதுக்கு ஏற்ப குணச்சித்திர கேரக்டர்களில் நடித்து வருகிறார்.

எடை குறைந்து ஸ்லிம்மான பிரபு
எப்பொழுதும் பார்க்கவே செம க்யூட் ஆகவும் கொழுகொழுவென்று இருக்கும் நடிகர் பிரபு திடீரென தனது உடல் எடையை குறைத்து இளம் ஹீரோக்களுக்கு நிகராக மாறியுள்ளார். நடிகர் பிரபு எடை குறைந்து ஸ்லிம்மான தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எடை குறைந்து ஸ்லிம்மான பிரபு
எப்பொழுதும் பார்க்கவே செம க்யூட் ஆகவும் கொழுகொழுவென்று இருக்கும் நடிகர் பிரபு திடீரென தனது உடல் எடையை குறைத்து இளம் ஹீரோக்களுக்கு நிகராக மாறியுள்ளார். நடிகர் பிரபு எடை குறைந்து ஸ்லிம்மான தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம்
மெலிந்த தோற்றத்திற்கு மாறியுள்ள பிரபுவும், குஷ்புவும் மீண்டும் இணைந்து நடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் பிரபு தனது மகனும் நடிகருமான விக்ரம் பிரபுவுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

ராமோஜி ராவ் பிலிம் சிட்டி
கொரோனா தொற்றில் இருந்து மக்கள் அனைவரும் விடுபட வேண்டும் என்றும் திரைத்துறை மட்டுமல்லாது முடங்கி உள்ள அனைத்து துறையும் செயல்பட வேண்டும் என தான் வேண்டிக் கொண்டதாகவும் பிரபு கூறியுள்ளார். பிரபுவை தொடர்ந்து பேசிய அவரது மகன் விக்ரம் பிரபு தான் கலந்து கொண்ட படப்பிடிப்புகள் ஹைத்ராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து முடிந்ததாக கூறினார்.

திருப்பதியில் ரசிகர்களுடன் செல்பி
அனைத்து படப்பிடிப்புகளும் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் நிறைவடைந்து விட்டதாகவும் இறுதியாக பொன்னியின் செல்வன் படத்தில் தனக்கான காட்சிகள் நிறைவடைந்துவிட்டது என்பதாலும் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்ததாக தெரிவித்தார்
. பின்னர் பிரபுவும் விக்ரம் பிரபுவும் அங்கிருந்த ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டு புறப்பட்டு சென்றனர்.

நயன்தாரா விக்கியுடன் தரிசனம்
கடந்த வாரம் நடிகை ஷ்ரேயா தனது கணவருடன் திருப்பதி ஏழு மலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவரை தொடர்ந்து நேற்று நடிகை நயன்தாரா தனது காதலரான விக்னேஷ் சிவனுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். இந்நிலையில் நடிகர் பிரபு தனது மகனுடன் சாமி தரிசனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.