வந்தியத்தேவன் உடன் சுந்தரச் சோழன்.. மீண்டும் பொன்னியின் செல்வனில் இணைந்த பிரகாஷ் ராஜ்.. செம வைரல்!

சென்னை: கை முறிவு காரணமாக படப்பிடிப்புக்கு ஓய்வு கொடுத்திருந்த நடிகர் பிரகாஷ் ராஜ், மீண்டும் ஷூட்டிங்கில் பிசியாகி உள்ளார்.

தனுஷின் திருச்சிற்றம்பலம், பொன்னியின் செல்வன் என பறந்து பறந்து நடித்து வருகிறார்.

மீண்டும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்புக்கு சென்றுள்ள பிரகாஷ் ராஜ் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

பொன்னியின் செல்வன் படத்தில்

பொன்னியின் செல்வன் படத்தில்

செக்கச் சிவந்த வானம் படத்திற்கு பிறகு மணிரத்னம் தயாரிப்பில் வெளியான நவரசா ஆந்தாலஜியில் இடம்பெற்று இருந்த எதிரி குறும்படத்தில் நடித்திருந்த பிரகாஷ் ராஜ், மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கை முறிவு

கை முறிவு

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஜவகர் மித்ரன் இயக்கி வரும் திருச்சிற்றம்பலம் படத்தின் படப்பிடிப்பு சென்னை பெருங்குடியில் உள்ள சன் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. திருவிளையாடல் ஆரம்பம் படத்தை போலவே இதிலும் பிரகாஷ் ராஜ் மற்றும் தனுஷ் நடிக்கும் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது. அந்த படத்தின் ஷூட்டிங்கின் போது எதிர்பாராமல் நடந்த லேசான விபத்தில் சிக்கிய பிரகாஷ் ராஜுக்கு கையில் முறிவு ஏற்பட்டது.

அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சை

கையில் முறிவு ஏற்பட்ட நிலையில், ஹைதராபாத்திற்கு பறந்த நடிகர் பிரகாஷ் ராஜ் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துக் கொண்டு டெவில் இஸ் பேக் என போட்டோ போட்டு ரசிகர்களை நிம்மதியடைய செய்தார். இந்நிலையில், மீண்டும் வழக்கம் போல ஷூட்டிங்கிற்கு வந்து விட்டார் பிரகாஷ் ராஜ்.

சிரஞ்சீவி உடன்

சிரஞ்சீவி உடன்

ஹைதராபாத்தில் சிகிச்சை முடிந்து ஜிம்முக்கு சென்ற பிரகாஷ் ராஜ் அங்கே மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் ஏற்பட்ட சந்திப்பை தொடர்ந்து அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்து அன்னய்யாவுடன் இன்று காலை ஜிம்மில் எடுத்துக் கொண்ட புகைப்படம் என தான் மீண்டும் படப்பிடிப்புக்கு தயார் ஆகி வருவதை குறிப்பிட்டு இருந்தார்.

மணிரத்னம் மற்றும் கார்த்தியுடன்

மணிரத்னம் மற்றும் கார்த்தியுடன்

இந்நிலையில், தற்போது இயக்குநர் மணிரத்னம் மற்றும் நடிகர் கார்த்தி உடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். குவாலியருக்கு விமானம் மூலம் வந்து இறங்கி இருக்கிறோம் என பொன்னியின் செல்வன் படம் குறித்த சூப்பரான அப்டேட்டையும் நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

எங்கே ஷூட்டிங்

எங்கே ஷூட்டிங்

பொன்னியின் செல்வனின் அடுத்த ஷெட்யூல் குவாலிரில் நடைபெறுகிறது என்கிற ஹாட் அப்டேட்டை கொடுத்த பிரகாஷ் ராஜுக்கு ஏகப்பட்ட பொன்னியின் செல்வன் ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். மேலும், வெகு விரைவாக பொன்னியின் செல்வன் படப்பிடிப்புக்கு திரும்பியுள்ள பிரகாஷ் ராஜை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.

சுந்தர சோழரும் வந்தியத்தேவரும்

சுந்தர சோழரும் வந்தியத்தேவரும்

பொன்னியின் செல்வன் பட நடிகர் கார்த்தி உடன் பிரகாஷ் ராஜ் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வந்தியத்தேவன் உடன் சுந்தர சோழன் என கமெண்ட் செய்து வருகின்றனர். நடிகர் பிரகாஷ் ராஜ் இந்த படத்தில் சுந்தர சோழனாக நடித்து வருகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இது தொடர்பாக இதுவரை மணிரத்னம் மற்றும் பொன்னியின் செல்வன் படக்குழு சார்பில் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

உடல் நலம் எப்படி இருக்கு?

உடல் நலம் எப்படி இருக்கு?

கையில் லேசான முறிவு ஏற்பட அதற்காக நடிகர் பிரகாஷ் ராஜ் அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில், மீண்டும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்புக்கு அவர் வந்துள்ளதை பார்த்த ரசிகர்கள் சார்.. உடல் நலம் எப்படி இருக்கு? என்கிற கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.

தனுஷ் பட ஷூட்டிங்

தனுஷ் பட ஷூட்டிங்

பெருங்குடியில் உள்ள சன் ஸ்டூடியோவில் தொடர்ந்து நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் ஷூட்டிங் பிரகாஷ் ராஜ் இல்லாமல் தனுஷ் போர்ஷன்கள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், உடல் நிலை சீரான பிரகாஷ் ராஜ் திருச்சிற்றம்பலத்தில் கலந்து கொள்ளாமல் பொன்னியின் செல்வனில் கலந்து கொண்டிருப்பதை பார்த்த தனுஷ் ரசிகர்கள் திருச்சிற்றம்பலம் ஷூட்டிங்கிற்கு எப்போ சார் போவீங்கன்னும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

காத்திருக்கிறோம்

காத்திருக்கிறோம்

சட்டுபுட்டுன்னு பொன்னியின் செல்வன் படத்தை முடிங்க சார்.. அந்த படத்தோட ரிலீசுக்காக ரசிகர்கள் பலரும் காத்திருக்கிறோம் என்றும் ஏகப்பட்ட ரசிகர்கள் பிரகாஷ் ராஜின் அந்த ட்வீட்டுக்கு கீழ் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X