ஹாலிவுட் படத்தில் ஒப்பந்தமான பிரகாஷ் ராஜ்… வாழ்த்தும் ரசிகர்கள் !

சென்னை : நடிகர் பிரகாஷ் ராஜ் ஹாலிவுட் திரைப்படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஹாலிவுட்டில் என்ன படம், யாருடன் நடிக்கிறார் என்கிற எந்த விவரம் தெரியவில்லை

தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பிரகாஷ் ராஜ் நடித்து வருகிறார்.

பிரகாஷ் ராஜ்

பிரகாஷ் ராஜ்

ஹாய் செல்லம் இந்த வார்த்தையை கேட்டாலே நம்ம கண் முன் வந்து நிற்கும் முதல் உருவம் நடிகர் பிரகாஷ் ராஜின் முகமாகத்தான் இருக்கும். பெங்களூருவைச் சேர்ந்த பிரகாஷ் ராஜ், இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் இயக்கிய டூயட் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பல மொழிகளில்

பல மொழிகளில்

பின்னர் தெலுங்கு, இந்தி, கன்னடம், என பல மொழி படங்களில் குணச்சித்திர நடிகராகவும், வில்லன் நடிகராகவும் நடித்து அசத்தி வருகிறார். நடிகர் பிரகாஷ் ராஜ் பல்வேறு, கஷ்டங்களை கடந்து தான் தன்னை ஒரு நிலையான நடிகராக நிலைநிறுத்திக்கொண்டார்.

பொன்னியின் செல்வன் படத்தில்

பொன்னியின் செல்வன் படத்தில்

ஏராளமான திரைப்படங்களை கையில் வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வரும் பிரகாஷ் ராஜ், மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சுந்தர சோழன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் பிரகாஷ் ராஜூக்கு தோள் பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கையில் போட்ட கட்டோடு பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இப்படத்தில் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்தது.

பிஸியாக

பிஸியாக

அதேபோல எனிமி,அண்ணாத்த,கேஜிஎஃப் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். கார்த்தி நடிக்கும்,விருமன் படத்திலும், மேஜர், புஷ்பா, சர்காரி வாரி படா என்ற தெலுங்கு திரைப்படத்திலும், 2 மலையாளத் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

ஹாலிவுட் படத்தில்

ஹாலிவுட் படத்தில்

இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் பிரகாஷ் ராஜ், விரைவில் ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம். சமீபத்திய பேட்டி மூலம் அவர் இதனை உறுதி செய்துள்ளார். ஏற்கனவே தமிழ் திரையுலகை சேர்ந்த தனுஷ், நெப்போலியன், ஜிவி பிரகாஷ் ஆகியோர் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது பிரகாஷ் ராஜும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X