மின்சார வாரியம் கொள்ளையடிக்குதுன்னு எத்தனை பேரு நினைக்கிறீங்க.. பிரபல நடிகரின் டிவிட்டால் பரபரப்பு!
சென்னை: பிரபல நடிகரான பிரசன்னா மின்சார வாரியம் கொள்ளையடிப்பதாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
நடிகர் பிரசன்னா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். ஹீரோ மட்டுமின்றி வில்லனாகவும் பட்டைய கிளப்பி வருகிறார்.
இவர் நடிகை ஸ்னேகாவை கடந்த 2012ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

நடிகரின் டிவிட்
சமூக வலைதளங்கள் வாயிலாக அவ்வப்போது ரசிகர்களுடன் பேசி வரும் பிரசன்னா, தற்போது பதிவிட்டுள்ள ஒரு டிவிட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்காளக ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.

மீண்டும் கணக்கெடுப்பு
லாக்டவுனால் கடந்த இரண்டு மாதங்களாக மின் அளவை கணக்கெடுப்பு செய்யாத மின்வாரியம் அதற்கு முந்தைய கட்டணத்தையே செலுத்துமாறு கூறியது. இந்நிலையில் தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் மின்வாரியம் மின் அளவை வீடு வீடாக கணக்கீடு செய்து வருகிறது.

கொள்ளை
அந்த வகையில் நடிகர் பிரசன்னாவின் வீட்டிற்கு 70000 ரூபாய் மின்கட்டணம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, பிரசன்னா தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த கொரோனா லாக்டவுன் நேரத்தில் மின்சார வாரியம் கொள்ளையடிப்பதாக எத்தனை பேர் நினைக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

பகல்கொள்ளை
அவரது இந்த டிவிட் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுதொடர்பாக தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த நடிகர் பிரசன்னா தனது வீட்டிற்கு 70 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளதாகவும் இது பகல்கொள்ளையாக இருப்பதாகவும் குற்றம்சாட்டியிருக்கிறார்.

பல மடங்கு அதிகம்
தனது வீடு தனது தந்தை வீடு மற்றும் மாமனார் வீடு ஆகியோருக்கு சேர்த்து இந்த கட்டணம் வந்திருப்பதாகவும் இது ஜனவரி மாதத்தை காட்டிலும் பல மடங்கு அதிகமாக இருப்பதாகவும் நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த தொகையை தன்னால் கட்ட முடியும் என்றும் ஆனால் இதே நிலைமை ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு வந்தால் அவர்களால் எப்படி இவ்வளவு பெரிய தொகையை செலுத்த முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

சரி செய்யப்படும்
இந்த குற்றச்சாட்டைக் கேட்ட மின்சார வாரியம் பிரசன்னாவின் வீட்டில் மீண்டும் மின் கணக்கெடுப்பு செய்யப்படும் என்றும் பிழை இருந்தால் சரி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மின்சார வாரியம் கொள்ளையடிப்பதாக நடிகர் பிரசன்னா கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











