துரோகத்தால் வீழ்த்தப்பட்டேன்.. மனம் திறந்த பிரசாந்த்.. இதெல்லாம் நடந்து இருக்கா?
சென்னை: நடிகர் பிரசாந்த் நடிப்பில் ஆகஸ்ட் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள படம் அந்தகன். இந்த படம் முதலில் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என கூறப்பட்டது. இதற்கான வேலைகளும் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் படத்தினை ஆகஸ்ட் 9ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்து நேற்று அறிவித்துள்ளது. இந்த படம் ஹிந்தியில் வெளியான அந்தாதூண் படத்தின் தமிழ் ரீமேக் என்பதால் இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு தனி ஆர்வம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த படம் பிரசாந்த்தின் 50வது படம்.
இந்த படத்தினை பிரசாந்த்தின் தந்தையான தியாகராஜன் தயாரித்தும் இயக்கியும் உள்ளார். படத்தில் சிம்ரன், ப்ரியா ஆனந்த், ஊர்வசி, வனிதா விஜயகுமார், பெசண்ட் நகர் ரவி, கே.எஸ். ரவிக்குமார், யோகி பாபு, சமுத்திரக் கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ப்ரோமோ பாடலை விஜய் வெளியிட்டார்.

இந்த படத்தின் ஆந்தம் பாடலை கடந்த வாரம் சென்னையில் படக்குழு வெளியிட்டது. இது மட்டும் இல்லாமல் பிரசாந்த் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தி கோட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரெடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றது. அந்தகன் படம் சில ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகப்பட்ட திரைப்படம் என்றாலும், சில பல காரணங்களால படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போய்க்கொண்டே இருக்கின்றது. படத்தில் பிரசாந்த் பார்வை மாற்றுத்திறனாளியாக நடித்துள்ளார்.

அந்தகன் புரோமோஷன்: இந்நிலையில் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அந்தகன் படக்குழுவிடம் பல கேள்விகள் முன்வைக்கப்படுகின்றது. படத்தின் கதாநாயகன் பிரசாந்த்திடம் சில கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அதற்கு அவரும் சிறப்பாக பதில்கள் கூறியுள்ளார். அது குறித்து பார்க்கலாம். அஜித், தபு, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தம் ஆனது நடிகர் பிரசாந்த் தான். இது குறித்து கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு பலமுறை கூறியுள்ளார்.

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்: இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கமுடியாமல் போய்விட்டதே என நீங்கள் என்றைக்காவது வருத்தப்பட்டது உண்டா என்ற கேள்வி பிரசாந்த்திடம் கேட்கப்பட்டது. அதற்கு, " அப்படியெல்லாம் இல்லை. நான் அந்த நேரத்தில் வேறொரு படத்தில் நடிக்க நினைத்தேன். அதுதான் எனக்கு முக்கியமாகப்பட்டது. அதனால்தான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடிக்க முடியவில்லை என பதில் அளித்துள்ளார். மேலும் ஷங்கரின் காதலன் படத்தில் நடிக்க என்னை அணுகினார். ஆனால் அந்த நேரத்தில் நான் வேறொரு கமிட்மெண்டில் இருந்ததால் நடிக்க முடியவில்லை. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். நான் நடித்த படங்கள் வெற்றி பெற்றால் அதனைக் கொண்டாடியதும் இல்லை, தோல்வி அடைந்தால் வருதப்பட்டதும் இல்லை என பதில் அளித்தார்.

துரோகம்: மற்றொரு நடிகர் நடித்து அந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறினால் அதனை நான் மகிழ்ச்சியாகத்தான் கருதுவேன், அதுதான் சினிமாவில் இருக்கும் அனைவருக்கும் இருக்கவேண்டிய பண்பு என நினைக்கின்றேன் எனக் கூறியுள்ளார். மேலும், துரோகம் என கேட்கப்பட்டதற்கு, ஒரு நிமிடம் யோசித்த நடிகர் பிரசாந்த், அது ஒரு எமோஷன். நம்பியவர்களை ஏமாற்றுவதுதான் துரோகம். அதுதான் என் வாழ்க்கையில் நடந்தது எனக் கூறினார்.


Click it and Unblock the Notifications











