சந்திரமுகி ரஜினிகாந்த் மாதிரி இந்த வயசுலையும் பிரசாந்த் எப்படி காலைத் தூக்குறாரு பாருங்க!

சென்னை: நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் அந்தகன். இந்த படம் பிரசாந்த்தின் 50வது படம். இந்தப் படத்தை பிரசாந்த்தின் தந்தையான தியாகராஜன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தை அவரே தயாரித்துள்ளார். இந்தப் படம் ஹிந்தியில் வெளியான அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக் படம். இந்த படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் முதல் பாடலுக்கான புரோமோவை விஜய் வெளியிட்டார்.

இந்த படத்தின் ஆந்தம் பாடலை கடந்த வாரம் சென்னையில் படக்குழு வெளியிட்டது. இது மட்டும் இல்லாமல் பிரசாந்த் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தி கோட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரெடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றது. நேற்று அதாவது ஜூலை 27ஆம் தேதி கூட தி கோட் படத்தின் இயக்குநர் வெங்கர் பிரபு, படத்தின் பின்னணி இசைகோர்ப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறினார்.

Prasanth Rajinikanth Chandramuki

அந்தகன் படம் சில ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட திரைப்படம் என்றாலும், சில பல காரணங்களால படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போய்க்கொண்டே இருக்கின்றது. இந்தப் படத்தில் சிம்ரன், ஊர்வசி, ப்ரியா ஆனந்த், வனிதா விஜய்குமார், பெசண்ட் நகர் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தில் பிரசாந்த் பார்வை மாற்றுத்திறனாளியாக நடித்துள்ளார்.

ஒற்றைக் கால்: இந்நிலையில் படத்தின் புரோமோசன் நிகழ்ச்சிக்காக தனியார் யூடியூப் சேனல்களுக்கு நடிகர் பிரசாந்த் பேட்டி கொடுத்து வருகின்றார். இந்நிலையில் அந்தகன் படத்தின் புரோமோசன் பேட்டியில், நடிகர் பிரசாந்த ஒற்றைக் காலைத் தூக்கி ஒற்றைக் காலில் நின்று பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார். சினிமாவில் இருந்து கிட்டத்தட்ட ஒதுங்கியே இருந்த பிரசாந்த் கொஞ்சம் பருமனாகவே காணப்படுகின்றார். இதனால் அவர் தொடர்ந்து உடற்பயிற்சி செய்யாமல் இருப்பார் என பலரும் நினைத்துக் கொண்டு இருந்தனர்.

சந்திரமுகி சூப்பர் ஸ்டார்: ஆனால் பிரசாந்த் ஒற்றைக் காலைத் தூக்கி படத்தில் வரும் சண்டைக் காட்சிகளைப் போல், காலைத் தூக்கி மிரட்டிவிட்டார் என்றே கூறவேண்டும். இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் சந்திரமுகி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலைத் தூக்கிக் கொண்டு நிற்பதைப்போல் நின்றுகொண்டு உள்ளார். இந்த வயசுலயும் பிரசாந்த் மாஸ் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

உடனடி வெற்றி: மேலும் அந்த நிகழ்ச்சியில், எனக்கு மட்டும் இல்லை திரைத்துறையில் உள்ள அனைவருக்கும் உடனடி வெற்றி தேவைப்படுகின்றது. ஒரு படத்தில் நடிகர் ஹிட் கொடுக்கின்றார் என்றால், அந்த நடிகரை அனைவரும் கொண்டாடுவார்கள். அதே நடிகர் அடுத்த படத்தில் தோல்வி அடைந்தால், அவர் அவ்வளவுதான் என பேசுவார்கள். எனக்கு எந்த நடிகர் மீதும் பொறாமை கிடையாது. எந்த நடிகருடனும் பிரச்னை கிடையாது. நான் வருடம் முழுவதும் உழைத்தாலும் நான்கு படங்கள்தான் கொடுக்க முடியும்.

தவறு இல்லை: ஆனால் இன்றைக்கு 100 படங்கள் ரிலீஸ் ஆகின்றது என்றால் கூட மீதி 96 படங்கள் உள்ளது. தமிழ் சினிமாவில் 20இல் இருந்து 30 கதாநாயகர்கள் உள்ளனர். நான் ஒரு நடிகன். எனக்கு பிடித்த கதாபாத்திரங்களில் நடிக்கத்தான் செய்வேன். அதில் எந்த தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. மேலும் ஒருவர் வந்து உங்களிடம், சார், நீங்கள் இந்த படத்தை நடித்துக் கொடுத்தால் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் சார் எனக் கூறும்போது கட்டாயம் உதவத்தானே செய்வீர்கள். அப்படித்தான் நானும் எனக் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X