பிரச்சாரத்தில் குதித்தார் பிரசாந்த்: திமுகவுக்கு வாக்கு சேகரித்தார்!

திரும்பிய பக்கமெல்லாம் யாராவது ஒரு சினிமா நடிகர் திமுகவுக்கோ அதிமுகவுக்கோ வாக்கு கேட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. இதற்கு முன் எந்தத் தேர்தலிலுமே பார்க்க முடியாத நிலை இது.
இந்த நட்சத்திர பிரச்சாரகர்கள் லிஸ்டில் புதிதாக சேர்ந்துள்ளவர் நடிகர் பிரசாந்த். திமுகவுக்கு ஆதரவாக அரசியல் களத்தில் இறங்கியுள்ளார்.
பொன்னர் சங்கர் என்ற அவரது பிரமாண்ட சரித்திரப் படம் வெளியாகியுள்ள நிலையில், திமுகவின் ஆயிரம் விளக்குத் தொகுதி வேட்பாளர் அசன் முகமது ஜின்னாவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அவர்.
ஞாயிற்றுக்கிழமை முதல் முறையாக தனது பிரச்சாரத்தை அவர் ஆரம்பித்தார். பார்த்தீஸ்வரன் காலனி, சூளைமேடு, நமச்சிவாயபுரம், கோபாலபுரம், தாமஸ் சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் மக்களிடம் திமுகவுக்கு வாக்கு சேகரித்தார்.
"கலைஞர் அரசின் திட்டங்கள் தொடரவும், சென்னை நகரம் மேலும் மேம்பாடு அடையவும் ஜின்னாவை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்", எனக் கேட்டுக் கொண்டார்.
கலைஞரிடம் மு.க.ஸ்டாலினிடமும் உங்கள் பிரச்சினைகளை எடுத்துச் சொல்லி தீர்வு கிடைக்கச் செய்யும் ஆற்றலுடைய இளைஞர்தான் ஜின்னா என்று கூறிய ஜின்னா, தானும் ஆயிரம் விளக்குத் தொகுதியின் வாக்காளன் என்றார்.
துணை முதல்வர் ஸ்டாலின்...
ஜின்னாவை ஆதரித்து துணை முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் திண்டுக்கல் லியோனி ஆகியோரும் ஆயிரம் விளக்குத் தொகுதியில் பிரச்சாரம் செய்தனர்.


Click it and Unblock the Notifications











