Actor Prashanth: விஜய், பிரபுதேவாவுடன் இணைந்து நடிக்க காரணம்.. வெளிப்படுத்திய பிரஷாந்த்!
சென்னை: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் தற்போது மாஸ்கோவில் நடந்து வருகிறது. இந்தப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். அப்பா மற்றும் மகன் என இருவேறு கேரக்டர்களின் விஜய் நடித்துவரும் இந்த படத்தில் அவருடன் நடிகர் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, ஸ்நேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்து வருகின்றனர். இதுமட்டும் இல்லாமல் வெங்கட் பிரபுவின் கூட்டணியில் உள்ள வைபவ், பிரேம்ஜி உள்ளிட்டவர்களும் படத்தில் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். இவர்கள் அனைவரையும் வைத்து படத்தை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு.
எப்போதுமே கலாட்டாவான படங்களை கொடுப்பதில் முன்னணியில் இருப்பவர் வெங்கட் பிரபு. அந்த வகையில் சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகிவரும் இந்தப் படத்தின் கதைக்களம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்றைய தினம் பிரஷாந்தின் பிறந்தநாளையொட்டி படக்குழுவினர் அவரது கேரக்டர் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் கையில் துப்பாக்கியை ஏந்தியபடி பிரஷாந்த் காணப்படுகிறார்.

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம்: நடிகர் விஜய். பிரசாந்த். பிரபுதேவா. அஜ்மல். சினேகா. லைலா. மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை, கேரளா, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ள சூழலில் படக்குழுவினர் தற்போது அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக மாஸ்கோ சென்றுள்ளனர். துபாய் வழியாக விஜய் மாஸ்கோ சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் துபாய் விமான நிலையத்தில் இருக்கும் படியான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன.
நடிகர் பிரஷாந்த்: இந்தப் படத்தில் விஜயுடன் இணைந்து நடித்து வரும் நடிகர் பிரசாந்த் மிகப்பெரிய ஹீரோவாக 90களில் வலம் வந்தவர். ஷங்கர் உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றியவர். பல வெற்றி படங்களை கொடுத்தவர். இவருக்கு 2000க்கு மேல் படவாய்ப்புகள் குறைந்த நிலையில் தற்போது அந்தகன் என்ற படத்தில் நடித்த முடித்துள்ளார். ஆனால் இந்தப்படம் ரிலீசாகாமல் உள்ளது. இந்நிலையில் தற்போது விஜய்யுடன் இணைந்து தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இன்றைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் பிரசாந்த்.
பிரஷாந்த் பிறந்தநாள்: பிரஷாந்த் பிறந்தநாளையொட்டி திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அவரது கேரக்டர் போஸ்டரை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளது GOAT டீம். இந்நிலையில் தற்போது பிரசாந்த் கொடுத்துள்ள ஒரு பேட்டியில் விஜய் மற்றும் பிரபுதேவாவுடன் இணைந்து தான் நடிப்பதற்கான காரணத்தை தெளிவுப்படுத்தியுள்ளார். வெங்கட் பிரபு படத்தின் கதையை கூறும்போதே இது மல்டி ஸ்டாரர் படம் என்றும் தெரிவித்ததாகவும் அவர் தன்னிடம் கதையை விளக்கியது மிகவும் கிரேட்டாக இருந்ததாகவும் பிரஷாந்த் கூறியுள்ளார்.
விஜய், பிரபுதேவாவுடன் இணைந்து நடிக்க காரணம்: மேலும் விஜய், பிரபுதேவா உள்ளிட்டவர்களுடன் தான் இணைந்து நடிப்பது மிகப்பெரிய விஷயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது மிக அழகான ஸ்கிரிப்ட் என்பதால் தாங்கள் மூன்று பேரும் இணைந்து நடித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். படத்தில் பல சிறப்பான திருப்புமுனைகள் உள்ளதாகவும் பிரஷாந்த் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அனைத்து விதமான ரசிகர்களுக்கும் இந்த படம் விருந்தாக அமையும் என்றும் படத்தில் விஜய், பிரபுதேவாவுடன் தன்னுடைய நடனமும் சிறப்பாக இருக்கும் என்றும் ஜாலியான ஒரு படத்தை வெங்கட் பிரபு கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.



Click it and Unblock the Notifications











