முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகர்... எல்லாம் அந்தப் படத்துக்கு பிறகுதான்!
சென்னை: பிரபல நடிகரான பிரேம் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரேம். ஏராளமான படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
கடைசியாக நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார் நடிகர் பிரேம் . இந்தப் படத்தில் நடிகர் விஜய்யின் நண்பராக நடித்திருந்தார் பிரேம்.

கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்..
இதனை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார் பிரேம். அதன்படி ஆர் ஜி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் நகுல் நடிக்கும் படத்தில் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார் பிரேம். இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள நடிகர் பிரேம், "பல வருடங்களில் ஒரு கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் இரட்டை வேடங்களில் நடிப்பது இதுவே முதல் முறை என்று தான் நினைப்பதாக கூறியுள்ளார்.

வித்தியாசமாக இருக்கும்..
மேலும் தன்னுடைய கதாப்பாத்திரங்கள் குறித்து அதிகம் வெளிப்படுத்தும் நிலையில் தான் இல்லை என்றும் ஆனால் அவை உண்மையில் வித்தியாசமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார் நடிகர் பிரேம். தொடர்ந்து பேசியுள்ள பிரேம் தான் அடுத்தடுத்து ஒப்பந்தமாகியுள்ள படங்கள் குறித்தும் பேசியுள்ளார்.

சசிக்குமாருடன் குதிரை ஜாக்கியாக..
அதன்படி ஹேமந்த் குமார் இயக்கத்தில் உருவாகும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் சசிகுமாருடன் குதிரை ஜாக்கியாக நடிப்பதாகவும், விதார்த்துடன் எஸ்.பி. சக்திவேல் இயக்கும் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பிருத்வி ஆதித்யாவின் ஆந்தாலஜி மற்றும் ஜே.பி.எஸ். சதீஷின் மற்றொரு படத்திலும் நடிப்பதாக கூறியுள்ளார்.
Recommended Video

வெப் சீரிஸிலும் பிஸி..
தொடர்ந்து சண்முகம் முத்துசாமி இயக்கும் கேங்ஸ்டர் ரொமான்ஸ் படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து நடிக்க சமீபத்தில் ஒப்பந்தம் ஆகியிருப்பதாகவும் கூறியுள்ளார். இவை தவிர புஷ்கர்-காயத்ரி தயாரிக்கும் ஒரு வெப் சீரிஸையும் முடித்துவிட்டதாகவும் கூறியுள்ளார் நடிகர் பிரேம்.


Click it and Unblock the Notifications











