பிரேம்ஜி போட்ட புதிர்.. கடுப்பாகி கலாய்த்த மிர்ச்சி சிவா!
சென்னை : நடிகர் பிரேம்ஜி கொரன்டைன் நேரத்தை நல்ல முறையில் செலவிட புதிர் வினா ஒன்றை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த அவரது நண்பரான மிர்ச்சி சிவா எதிர்பாராத பதிலை கொடுத்துள்ளார்.
நடிகர் பிரேம்ஜி ட்விட்டரில் ஒரு புதிர் வினா ஒன்றை கேட்டுள்ளார் அதன் கேள்வி ஒரு மருத்துவமனையில் 16 தனிமைபடுத்தபட்ட வார்ட்டுகள் இருக்கிறது அதில் 13வது வார்ட்டில் இருக்கும் ஒரு நபர் குணமடைந்து விட்டார் தற்போது அவர் மற்ற நண்பர்களை நலம் விசாரித்து விட்டு வெளியேற வேண்டும் ஆனால் ஒரு முறை தான் மற்ற நண்பர்களை பார்க்க முடியும் இரண்டாவது முறை பார்த்தால் அவருக்கு மீண்டும் உடல்நலம் கெட்டு போகும் எப்படி அவர் சரியாக வெளியேறுவார் என்பதே கேள்வி .

இதனுடன் ஒரு அட்டவணையும் இணைத்து இந்த கேள்வியை கேட்டிருந்தார் நடிகர் பிரேம்ஜி. இதற்கு பல ரசிகர்களும் இப்படி போயிருப்பார் அப்படி போயிருப்பார் என்று பதில் கூறி வந்தனர். இந்த புதிருக்கு பதில் கூறிய மிர்ச்சி சிவா ஒரு வீடியோ கால் செய்து விடைபெறலாம் என்று சிம்பிளாக பதிலளித்துள்ளார் .
இந்த அசரவைக்கும் பதிலை பார்த்து கடுப்பாகிய பிரேம்ஜி ஒரு காமெடி காட்சியில் வடிவேலு யாருகிட்டடா கேக்குற அண்ணன்ட தான கேக்குற என்று கட்டி பிடித்து ஒரு ரியாக்ஷனை கொடுப்பார் அந்த ரியாக்ஷன் வீடியோவை பதிலாக கொடுத்து உள்ளார் பிரேம்ஜி .

இப்படி நண்பர்கள் இருவருமே மாற்றி மாற்றி ஒருவரை ஒருவர் கலாய்த்து நேரத்தை போக்கி உள்ளனர். இது இவர்களிடம் இருக்கும் இயல்பான செயலே இதை தான் நாம் பல படங்களில் பார்த்திருப்போம் .

வெங்கட் பிரபு நண்பர்கள் குழு படத்தில் மட்டும் சேட்டை செய்பவர்கள் கிடையாது நேரிலும் இவர்கள் குழு இப்படி மகிழ்ச்சியும் விளையாட்டும் நிறைந்த குழு தான். இவர்கள் செய்யும் லூட்டிகளை பலமுறை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருக்கின்றனர். பலரும் நண்பர்கள் என்றால் இப்படியும் இருப்பார்களா என்று ஆச்சரியபட்டு போகும் அளவிற்கு இவர்களின் மத்தியில் நகைச்சுவை உணர்வு இருக்கும் .

கடைசியாக மிர்ச்சி சிவா மற்றும் பிரேம்ஜி இணைந்து அவர்கள் குழுவின் சென்னை 28 இரண்டாம் பாகத்தில் நடித்தனர். வெங்கட் பிரபு இயக்கி வரும் பார்ட்டி படத்திலும் சிவா நடித்து வருகிறார். முதல் முறையாக வெங்கட் பிரபு படத்திற்கு பிரேம்ஜி இசையமைக்கிறார். வெங்கட் பிரபு குழுவின் வழக்கமான படமாக இருக்காது என்பதை இந்த படத்தின் பாடல்கள் மற்றும் பல வெளியிட பட்ட காட்சிகள் உறுதிபடுத்தியுள்ளது . இந்த கொரன்டைன் முடிந்ததும் படத்தை பற்றிய அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .


Click it and Unblock the Notifications











