கேஜிஎஃப் இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கும் பிரித்விராஜ்!
சென்னை : நடிகர் பிரித்விராஜ் பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் ஒப்பந்தமாகி இருக்க அதன் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் தொடங்கியது.
மலையாளத்தில் முன்னணி நடிகராக உள்ள பிரித்விராஜ் லூசிஃபர் என்ற படத்தை இயக்கி இயக்குனராகவும் அறிமுகமாகி உள்ளார்.
இந்தநிலையில் கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் சலார் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

கேஜிஎஃப் சாப்டர் 2
கே ஜி எஃப் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அனைத்து மொழி ரசிகர்களாலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் கேஜிஎஃப் சாப்டர் 2 இப்பொழுது பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. நடிகர் யஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கி வரும் இந்த திரைப்படம் அடுத்த வருடம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேஜிஎஃப் பாகம் இரண்டை இயக்கி வரும் அதே சமயம் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் சலார் படத்தையும் இயக்கி வருகிறார்.

மலையாள நடிகர் பிரித்விராஜ்
அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறு வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சலார் படத்தில் பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குனராக அவதாரம்
நடிகர் பிரித்விராஜ் மலையாளத்தில் முன்னணி நடிகராக இருந்து வரும் அதே சமயம் தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் சில படங்களில் நடித்து இங்கும் பிரபலமாக உள்ளார். மோகன்லால் நடிப்பில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற லூசிஃபர் திரைப்படத்தை இயக்கி இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார். பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்விராஜ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் தொடங்கப்பட்டது. அந்தப் படத்திற்கு கோல்ட் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

சலார் படத்தில் பிரித்விராஜ்
இந்த நிலையில் பிரித்விராஜ் கேஜிஎஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்து வரும் சலார் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் எந்த மாதிரியான கதாபாத்திரமாக இருக்கும் என்ற எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் இப்படத்தில் பிரித்விராஜ் வில்லனாக நடித்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











