தமிழ் படங்கள் கேரளாவில் நல்லா ஓடுறது வழக்கம் தான்.. உங்களுக்குத்தான் இது புதுசு.. பிரித்விராஜ் பேட்டி!

சென்னை: இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் ஆடு ஜீவிதம் படத்தில் பிரித்விராஜ் சுகுமாரர் நடித்துள்ளார். அமலா பால், ஜிம்மி ஜீன் லூயிஸ், கே.ஆர். கோகுல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்திரைப்படம் மார்ச் 28ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. இதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய பிரித்விராஜ், தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான்கள் இருக்கிறார்லகள், தமிழ் படங்கள் கேரளால நல்லா ஓடுறது வழக்கமான விஷயம் என்றார்.

விஷுவல் ரொமான்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ஆடு ஜீவிதம் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய 'ஆடு ஜீவிதம்' நாவலைத் தழுவி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. கேரளத்திலிருந்து அரேபிய தேசத்திற்கு செல்லும் நஜீப் என்ற நபர், அங்கு ஆடு மேய்க்கும் தொழிலாளியாகச் சேர்கிறார். அவர் அங்கு அனுபவவிக்கும் வலிகளை சொல்லும் கதைதான் ஆடு ஜீவிதம். இப்படத்தில் பிரித்வி ராஜின் மனைவியாக அமலா பால் நடித்துள்ளார்.

Actor PrithviRaj sugumar Interview about Tamil Cinema

இப்படத்தின் படப்பிடிப்பு 6 வருடங்களாக நடைபெற்ற நிலையில், இப்படம், மார்ச் 28 ஆம் தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு உட்பட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகிறது. தமிழில் ரெட் ஜெயண்ட் இப்படத்தை நிறுவனம் வெளியிடுகிறது. படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

உங்களுக்கு இது புதுசு: இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் செய்தியாளர், மலையாளப்படங்கள் தமிழ் நாட்டில் நன்றாக ஓடுவதை நீங்கள் எப்படி பார்க்கிறார்கள் என்ற கேட்டார். இதற்கு பதிலளித்த பிரித்வி ராஜ். கொஞ்ச மாசத்திற்கு முன்பு தான் லியோ, ஜெயிலர் திரைப்படம் கேரளாவில் தூள் கிளப்புச்சி, படம் வெளியாகி ஒரு மாதத்திற்கு மேலாகியும் படம் பார்க்க டிக்கெட்டே கிடைக்கல. உங்களுக்கு வேண்டுமானால், மலையாள படம் தமிழ் நாட்டுல நல்ல ஓடுவது என்பது புதுசா தெரியலாம். ஆனால், எங்களுக்கு இது புதுசு இல்ல, ஏன் என்றால் தமிழ் படம் கேரளாவில் வெற்றிகரமாக ஓடுவது ரொம்ப வருஷமா நடந்து கொண்டு தான் இருக்கிறது.

தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான்கள்: தமிழ் படம் கேரளாவில் ஓடுகிறது, மலையாள படம் தமிழ்நாட்டில் நன்றாக ஓடுகிறது என்பது ஒரு மகிழ்ச்சியான விஷயம் தான். இதனால், கேரளாவில் தமிழ் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் அதே போல தமிழ் படத்திற்கு கேரளாவில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற நிலைக்கு வந்தால், இது நல்ல விஷயம் தானே என்றார். மலையாளத்தில் நல்ல கதைகள் கையாளப்படுவதாக சொல்லப்படுகிறது.

அதை கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், தமிழ் சினிமாவில் வெற்றிமாறன், மாரி செல்வராஜ் , பா ரஞ்சித், ஷங்கர், அட்லீ என பல ஜாம்பவான்கள் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள். அண்மையில் வெளியான போர் தொழில் படத்தை பார்த்தேன் ரொம்ப நன்றாக இருந்தது, அவர் பற்றிக்கூட அண்மையில் ஒரு இயக்குநர் பாராட்டி பேசினார் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X