Prithviraj: ரஜினியை வைத்து தில்லுமுல்லு மாதிரி படம் இயக்கனும்.. பிரித்விராஜ் ஆசையை பாருங்க!
சென்னை: நடிகர் பிரித்திவிராஜ் சுகுமாரன், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தியில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். பான் இந்தியா ஸ்டாராகவும் மாஸ் காட்டி வருகிறார். இந்திய அளவில் வெளியாகும் படங்களில் இவரை காண முடிகிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் சலார். இந்தப் படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக நடித்து மாஸ் காட்டியிருந்தார் பிரித்திவிராஜ். பிரித்திவிராஜ் நடிப்பில் மட்டுமில்லாமல் இயக்கம், தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அடுத்ததாக பிரபல மலையாள இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கத்தில் ஆடு ஜீவிதம் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் 28ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் இந்தப் படம் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் மற்ற அனைத்து மொழிகளின் டப்பிங்கையும் பிரித்திவிராஜே மேற்கொண்டுள்ளார். படத்தில் பிரித்திவிராஜிற்கு ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார். இந்தப் படத்தை உருவாக்க கடந்த 10 ஆண்டுகளாக பிளெஸ்ஸி முயற்சிகள் மேற்கொண்டு தற்போது படததை எடுத்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் கதைக்கு பிரித்திவிராஜ் சிறப்பான வடித்தை கொடுத்துள்ளார். சமீபத்தில் படத்தின் ட்ரெயிலர் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

நடிகர் பிரித்திவிராஜ் சுகுமாரன்: மலையாள நடிகராக இருந்த போதிலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அடுத்தடுத்த மொழிகளில் தன்னை இணைத்துக் கொண்டு வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் நடிகர் பிரித்திவிராஜ் சுகுமாரன். நடிப்பில் மட்டுமில்லாமல் தயாரிப்பு, இயக்கம் என அடுத்தடுத்த தளங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். மோகன்லால் லீட் கேரக்டரில் நடித்து பிரித்திவிராஜ் இயக்கியிருந்த லூசிபர் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக மாறியது. இதன் இரண்டாவது பாகத்தையும் பிரித்திவிராஜ் உருவாக்கினார். கன்டண்ட் பாணி கதைக்களங்களில் பயணித்துவந்த மலையாள சினிமாவை அடுத்தக்கட்டத்திற்கு இந்தப் படம் எடுத்து சென்றது.
ஆடு ஜீவிதம் படம்: இந்நிலையில் பிளெஸ்ஸி இயக்கத்தில் பிரித்திவிராஜ் சுகுமாரன் நடித்துள்ள ஆடு ஜீவிதம் படம் வரும் 28ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் ரிலீசாகவுள்ளது, பிரபல எழுத்தாளர் பெண் யாமின் எழுதி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஆடு ஜீவிதம் நாவலை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை உருவாக்குவதற்காக கடந்த 10 ஆண்டுகளாக மெனக்கெட்டு வந்த பிளெஸ்ஸி, தற்போது இந்த படத்தை சாத்தியமாக்கி உள்ளார். சர்வதேச அளவில் மிகப்பெரிய கவனத்தை இந்த படம் பெற்றுள்ளது. பிரித்திவிராஜ் ஜோடியாக அமலா பால் இந்த படத்தில் நடித்துள்ளார்,
ரஜினியை இயக்க பிரித்திவிராஜ் விருப்பம்: இந்த படத்தின் பிரமோஷனுக்காக அடுத்தடுத்து பேட்டிகளை கொடுத்து வருகிறார் பிரித்திவிராஜ், அந்தவகையில் இவரது பேட்டி ஒன்றில் தமிழ் நடிகர்களுடன் இணைந்து படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் அவர்களை எந்த ஜானரில் வெளிப்படுத்த விரும்புவீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த பிரித்திவிராஜ், ரஜினியை வைத்து படமியக்க வேண்டும் என்றால் தான் காமெடி கதைக்களத்தையே தேர்ந்தெடுப்பேன் என்று தெரிவித்துள்ளார். ரஜினி நடிப்பில் வெளியான தில்லு முல்லு படம் தனக்கு மிகவும் பிடித்தமான படம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மற்ற மொழிகளில் டப்பிங்: இதையடுத்து கமல்ஹாசன் உடனுடன் தான் இணையநேர்ந்தால் அழுத்தமான கதைகளை தேர்ந்தெடுத்து இயக்குவேன் என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் ஆக்சன் படத்தில் இணைய ஆசைப்படுவதாகவும் ஆனால் அது சாதாரண கமர்சியல் படமாக இருக்காது என்றும் பிரித்விராஜ் தெரிவித்துள்ளார் அடுத்ததாக சூர்யாவுடன் காதல் கதையில் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் அவர் மிகச் சிறப்பான நடிகர் என்றும் பிரித்திவிராஜ் சுகுமாரன் தன்னுடைய பேட்டியில் தெளிவுபடுத்தியுள்ளார். இன்னும் சில தினங்களில் ரிலீசாகவுள்ள ஆடு ஜீவிதம் படத்திற்காக 5 மொழிகளிலும் தானே பிரித்திவிராஜ் டப்பிங் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











