Madhavan: ஜிம் போகாமல் 21 நாளில் எடையை குறைத்த மாதவன்... எப்படி தெரியுமா?

சென்னை: தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் என்றால் நம் நினைவுக்கு முதலில் வரும் நடிகர் மேடியாகத்தான் இருக்கும். தனது வசீகரமான அழகால் பெண்களின் கனவு கண்ணணாக இருந்த மாதவன். 'ராக்கெட்ரி' படத்திற்குப் பிறகு உடல் எடை அதிகரித்து காணப்பட்டார். தற்போது, ஜிம்மிற்கு போகாமல், வொர்க் அவுட் எதுவும் செய்யாமல் தனது உடல் எடையை குறைத்து பழைய மாதவனாக மாறி உள்ளார்.

வசீகரிக்கும் அழகிய தோற்றம், காண்போரை கவர்ந்திழுக்கும் அழகான சிரிப்பு என தமிழ் சினிமாவின் ஸ்மார்ட் ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் மாதவன். முதன் முதலில் 1996 ஆம் ஆண்டு இந்தியில் இஸ் ராத்கி சுபஹ் நஹி என்ற படத்தில் நடித்த மாதவன். தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான அலைபாயுதே படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார். முதல் படத்திலேயே பெண் ரசிகைகளுக்கு பிடித்தமான நடிகராக மாறினார் மாதவன்.

Madhavan tamil actor

சாக்லேட் பாய்: அலைபாயுதே படத்தை தொடர்ந்து, கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளியான மின்னலே படத்தில் நடித்தார். அந்த படமும் மாதவனுக்கு மற்றுமொரு அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது. அதன் பின, ரன், பிரியமான தோழி, கன்னத்தில் முத்தமிட்டால், ஜே ஜே , ஆயுத எழுத்து, போன்ற ஹிட் படங்களில் நடித்து வந்தார். திடீரென தமிழ் சினிமாவில் காணாமல் போன மாதவன் இறுதிச்சுற்று, விக்ரம் வேதா, மாறா போன்ற படங்களில் நடித்து இன்றைய 2கே கிட்ஸின் பேவரைட்டாகவும் மாறினார்.

நடிகர் மாதவன்: அழகான க்யூட் ஹீரோவான மாதவன் 2022 ஆம் ஆண்டு வெளியான 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' படத்தில் விஞ்ஞானி நம்பி நாராயணனாக நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்திற்காக கணிசமாக தனது எடையை அதிகரித்து இருந்தார். அதன் பின் ஒரு சில படத்தில் உடல் எடை அதிகரித்து காணப்பட்ட மாதவன், தற்போது உடல் எடையை குறைத்து சிக்குனு மாறி உள்ளார். 21 நாளில் உடல் எடையை குறைத்தது குறித்து மாதவன் பேசி உள்ளார்.

21 நாட்களில் உடல் எடை குறைப்பு: அதில், உடல் எடையை குறைக்க ஜிம்முக்கு போவது, உடற்பயிற்சி செய்வது என எந்தமாதிரியாக உடற்பயிற்சியையும் நான் செய்யவில்லை. அதற்கு பதிலாக, உணவை நன்றாக மென்னு ரசித்து சாப்பிடுவேன், 40 முதல் 60 முறை தண்ணீர் குடிப்பேன், மாலை 6:45 மணிக்குள் சமைத்த உணவை சாப்பிடுவேன், அதிகாலை 90 நிமிடமும், தூங்குவதற்கு முன்னும் நடைபயிற்சி செய்வேன் இயற்கையான உணவு, பதப்படுத்தப்பட்ட உணவை எடுத்துக்கொண்டு 21 நாட்களில் உடல் எடையை குறைத்ததாக தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X