Actor Rajinikanth: ஏஆர் ரஹ்மான்கிட்ட இதை நான் எதிர்பார்க்கவே இல்லை.. ரஜினிகாந்த் கலகலப்பு!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் லால் சலாம். இந்தப் படத்தை ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். பொங்கலையொட்டி வெளியாகவிருந்த இந்தப் படம் சில தவிர்க்க முடியாத காரணங்களால் ரிலீஸ் தள்ளிப் போனது. இந்நிலையில் வரும் பிப்ரவரி 9ம் தேதி சர்வதேச அளவில் படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. கிரிக்கெட்டை மையமாக கொண்ட இந்தப்படத்தில் அரசியலும் பேசப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படம் ரிலீசாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் பிரமோஷன்களை படக்குழுவினர் துவங்கியுள்ளனர்.

படத்தின் பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், நேற்றைய தினம் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். படத்தில் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். படத்தில் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இந்நிலையில் நேற்றைய தினம் சிறப்பாக நடந்த படத்தின் இசை வெளியீட்டில் நடிகர் ரஜினி, உள்ளிட்ட படக்குழுவினர் பேசியுள்ளனர்.

Actor Rajinikanth hails Music director AR Rahman in Lal salaam movie audio launch

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் லால் சலாம். இந்தப் படத்தை ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கியுள்ள நிலையில், லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். படம் பொங்கலையொட்டி வெளியாகவிருந்த நிலையில், ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. தற்போது பிப்ரவரி 9ம் தேதி படம் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. முன்னதாக 3, வை ராஜா வை போன்ற படங்களை இயக்கியுள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மூன்றாவது முயற்சியாக லால் சலாம் படம் உருவாகியுள்ளது.

லால் சலாம் படம்: கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் மொய்தீன் பாய் என்ற கேமியோ கேரக்டரில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். மேலும் முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவும் படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார். படம் ரிலீசாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி நேற்றைய தினம் படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், படத்தின் நாயகன்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

Actor Rajinikanth hails Music director AR Rahman in Lal salaam movie audio launch

லால் சலாம் இசை வெளியீடு: நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், விஜய், ஏஆர் ரஹ்மான் உள்ளிட்டவர்கள் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார். இந்தப் படத்தில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில் படத்தை பார்த்துவிட்டு ஐஸ்வர்யாவின் இயக்கம் குறித்து அவர் தன்னிடம் பாராட்டு தெரிவித்ததாகவும் படம் குறித்து நீண்ட நேரம் தன்னிடம் பேசியதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்தார். ஏஆர் ரஹ்மானிடம் இருந்து இதை தான் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார். முன்னதாக தன்னுடைய ரோபோ, சிவாஜி படங்களுக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளதை சுட்டிக் காட்டிய ரஜினிகாந்த், அந்த நேரத்தில்கூட அவர் தன்னிடம் இதுபோல அதிகமாக பேசியதில்லை என்றும் கூறினார்.

ரஜினிகாந்த் பேச்சு: தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த், விஜய்க்கும் தனக்கும் போட்டி என்று சமூக வலைதளங்களில் பேசப்பட்டது தனக்கு மிகுந்த மனவருத்தத்தை கொடுத்ததாகவும் தான் காக்கா, கழுகு கதையை அவரை வைத்து பேசவில்லை என்றும் கூறியுள்ளார். தான் விஜய்யை போட்டியாக நினைத்தால் அது தனக்கு கௌரவம் இல்லை என்றும் அதேபோலதான் விஜய்க்கும் என்று குறிப்பிட்டுள்ளார். தான் பார்த்து வளர்ந்த பையன் விஜய் என்றும் அதனால் தான் அவரை போட்டியாக கருதவில்லை என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார். இருவரின் ரசிகர்களும் இதுகுறித்து சண்டையிட வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X