எவ்வளவு பேர் வந்தா என்ன.. நான் கொடுக்கிறேன்டா போஸ்.. சூப்பர்ஸ்டாருடா!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த், தமிழில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் மிகச்சிறப்பான பல படங்களில் நடித்துள்ளவர். முன்னதாக நடிகர் அமிதாப்புடனேயே 3 படங்களில் நடித்துள்ளார். ஹம் படத்தில் அமிதாப்பின் தம்பியாக நடித்திருந்தார். தற்போது இந்தக் கூட்டணி வேட்டையன் படத்தில் 4வது முறையாக இணைந்துள்ளது.
அடுத்ததாக ரஜினிகாந்தின் வேட்டையன் படம் அக்டோபர் 4ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில், இந்தப் படத்தின் ஆடியோ வெளியீடு கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. கூலி படத்தின் சூட்டிங்கிலிருந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னை வந்திருந்தார் ரஜினிகாந்த்.

வேட்டையன் படம்: வேட்டையன் படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக ரஜினிகாந்தும் அவரது இந்த கருத்துக்கு முரண்பட்ட கருத்துக்களை கொண்ட மேலதிகாரியாக அமிதாப் பச்சனும் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்த படத்தை இசை வெளியீடு மிகவும் பிரமாண்டமாக சென்னையில் நடந்து முடிந்துள்ளது. அன்றைய தினமே படத்தின் டீசர் வெளியாகி சிறப்பான அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்காக கூலி பட ஷூட்டிங்கிலிருந்து சென்னை வந்திருந்தார் ரஜினிகாந்த். இந்நிலையில் இன்றைய தினம் அவர் மீண்டும் கூலி படத்தின் சூட்டிங்கில் இணைவதற்காக சென்றுள்ளார்.
மனசிலாயோ பாடல் குறித்து பாராட்டு: இந்நிலையில் வேட்டையன் படம் குறித்தும் மனசிலாயோ பாடல் குறித்தும் அவர் தன்னுடைய உற்சாகத்தை செய்தியாளர்களிடம் பதிவு செய்திருந்தார். சிறப்பாக செயல்பட்ட கொரியோகிராபர் தினேஷ் குருத்தும் அவர் பாராட்டு தெரிவித்திருந்த நிலையில் அவரிடம் செல்ஃபி எடுத்துக் கொள்வதற்கு ரசிகர்கள் அலைமோதியதை பார்க்க முடிந்தது. ஒருவர் பின் ஒருவராக பலரும் ரஜினியுடன் இணைந்து செல்ஃபி எடுத்துக் கொண்ட நிலையிலும் தன்னுடைய சிரிப்பு சிறிதும் மாறாமல் அவர்களுக்கு உற்சாகமாக ரஜினிகாந்த் போஸ் கொடுத்ததை பார்க்க முடிந்தது.
ரசிகர்களுடன் உற்சாக போஸ்: நேற்றைய தினம் செல்ஃபி கேட்டு வந்த ரசிகரிடம் இளம் நடிகை ஒருவர் காட்டமாக நடந்து கொண்ட நிலையில், 50 ஆண்டுகளை கடந்து சினிமாவில் பயணித்து வரும் ரஜினிகாந்த், தற்போதும் ரசிகர்கள் தான் தனக்கு ஆதாரம் என்பதை உணர்ந்து முகம் சுளிக்காமல் அவர்களிடம் சிரித்து பேசுவதை பார்க்க முடிகிறது. அனுபவம் எப்போதுமே பல விஷயங்களை கற்றுக் கொடுக்கும். தன்னுடைய கேரியரில் சில மோசமான சம்பவங்களையும் எதிர்கொண்டிருப்பார் ரஜினிகாந்த். ஆயினும் 70 வயதை கடந்த நிலையிலும் அவர் முகம் சுளிக்காமல் ரசிகர்களிடம் பேசி சிரிப்பது அனைத்து தரப்பினரையும் கவர்ந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











