நடிகர் ரஜினிகாந்த் அடுத்து இணையப் போவது இந்த இயக்குநருடனா? தீயாய் பரவும் தகவல்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அடுத்த இணையவுள்ள இயக்குநர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த். வயது வித்தியாசம் இன்றி கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார். தமிழ் மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டுள்ளார் ரஜினிகாந்த்.
சமீபத்தில் அவரது நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் வெளியானது. சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான இப்படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், கஜபதி பாபு, சூரி, சதீஷ், வேல ராமமூர்த்தி என பலர் நடித்தனர். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

அறுவை சிகிச்சை
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் புதிய படத்தில் நடிக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் தொடங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்துக்கு மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அடுத்த படத்திற்கு ரெடி
தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வரும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது பூரண குணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நடிகர் ரஜினிகாந்த் அடுத்த படத்தில் நடிக்க தன்னை தயார்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் ரஜினிகாந்தின் புதிய படத்தை இயக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

தனக்கும் ஒரு கதை..
ஏற்கனவே துல்கர்சல்மான் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரிய சாமியை அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த், தனக்கும் ஒரு கதை தயார் செய்யும்படி கூறியிருந்தார். எனவே அவரது இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

மீண்டும் கார்த்திக் சுப்புராஜ்
பின்னர் டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிப்பார் என்றும் தகவல் பரவியது. ஆனால் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியாததால் உடனடியாக ரஜினியை இயக்குவது ஆகாத காரியம் என கூறப்படுகிறது. இதனால் பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி மீண்டும் நடிப்பார் என்றும் கோலிவுட்டில் றெக்கை கட்டி பறந்து வருகிறது.
Recommended Video

அடுத்த மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்நிலையில் புதிய தகவலாக நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. அடுத்த மாதம் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ள நிலையில் அன்றைய தினம் அவரது அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.


Click it and Unblock the Notifications











