twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மருத்துவ சிகிச்சைக்காக நாளை மறுநாள் அமெரிக்கா புறப்படுகிறார் ரஜினிகாந்த்? 3 மாதம் ஓய்வெடுக்க திட்டம்

    |

    சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக நாளை மறுநாள் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    நடிகர் ரஜினிகாந்த் தர்பார் படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.

    ஆண் நண்பருடன் கடற்கரையில் செம ஆட்டம்.. வலிமை பட தயாரிப்பாளர் பொண்ணா இது என ஷாக்கான ரசிகர்கள்!ஆண் நண்பருடன் கடற்கரையில் செம ஆட்டம்.. வலிமை பட தயாரிப்பாளர் பொண்ணா இது என ஷாக்கான ரசிகர்கள்!

    ஹைத்ராபாத்தில் நடைபெற்று வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவு பெற்றது.

    அமெரிக்கா பயணம்

    அமெரிக்கா பயணம்

    எஞ்சிய சில காட்சிகள் உள்ள நிலையில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் பெரும்பாலும் காட்சியாக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

    ரத்த அழுத்தத்தில் மாற்றம்

    ரத்த அழுத்தத்தில் மாற்றம்

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹைத்ராபாத்தில் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரது ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    மருத்துவ பரிசோதனை

    மருத்துவ பரிசோதனை

    அதன்பிறகு சுமார் 2 மாதங்களுக்கும் மேல் படப்பிடிப்பில் பங்கேற்காமல் வீட்டிலேயே ஓய்வு எடுத்தார் ரஜினி. தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள அமெரிக்கா செல்கிறார் ரஜினி.

    கமிட்மெண்டுகள்

    கமிட்மெண்டுகள்

    கடந்த ஓராண்டுக்கும் மேலாக அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்தார் ரஜினிகாந்த். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டு விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை, படப்பிடிப்பு பணிகள் போன்ற கமிட்மெண்ட்டுகளால் அவரால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    மத்திய அரசு அனுமதி

    மத்திய அரசு அனுமதி

    இந்நிலையில் தனி விமானம் மூலம் அமெரிக்கா செல்ல மத்திய அரசிடம் ரஜினிகாந்த் கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியானது. ரஜினியின் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு, தனி விமானம் மூலம் அமெரிக்கா செல்ல அனுமதி அளித்தது. 14 பேர் வரை செல்லும் விமானத்தில் நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்துடன் அமெரிக்கா செல்ல உள்ளதாக தெரிகிறது.

    3 மாதம் ஓய்வு

    3 மாதம் ஓய்வு

    வரும் 21ஆம் தேதி ரஜினிகாந்த் அமெரிக்கா புறப்படுவார் என தகவல் வெளியான நிலையில் தற்போது நாளை மறு நாள் ரஜினிகாந்த் அமெரிக்கா புறப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் அமெரிக்காவில் மூன்று மாதம் தங்கி ஓய்வெடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    English summary
    Actor Rajinikanth leaves US day after tomorrow for Medical check up. Rajinikanth going to America in Special individual flight.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X