Actor Rajinikanth: அரசியல் கேள்விக்கு நான் பதில் சொல்ல மாட்டேன்.. ரஜினிகாந்த் கிரேட் எஸ்கேப்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர், லால் சலாம் படங்களை தொடர்ந்து தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தின் சூட்டிங், சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த மாதத்தில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் தற்போது லோகேஷ் கனகராஜ் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இந்தப் படத்தின் பூஜை குறித்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர், ராணா, ரித்திகா சிங் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடைந்து தீபாவளி ரிலீசாக படம் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் சூட்டிங்கிற்காக ஐதராபாத் புறப்பட்டு சென்ற ரஜினிகாந்த், படத்தின் சூட்டிங் 75 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் அடுத்தப்படத்தின் வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும் கூறியிருந்தார்.

Actor Rajinikanth says no to answer for Political questions

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்த படங்களில் இணைந்து நடித்து வருகிறார். இந்த வயதிலும் சுறுசுறுப்பாக நடித்துவரும் ரஜினிகாந்த், இளம் தலைமுறை நடிகர்களுக்கு மிகுந்த உத்வேகமாக காணப்படுகிறார். கடந்த ஆண்டில் அவரது ஜெயிலர் படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான நிலையில் கடந்த மாதத்தில் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படம் வெளியானது. கிரிக்கெட்டை மையமாக கொண்டு வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார்.

வேட்டையன் படம்: இந்தப் படத்தின் சூட்டிங் 75 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக அவர் தனது சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னதாக வேட்டையன் படத்தின் சூட்டிங்கிற்காக ஐதராபாத் புறப்பட்டு சென்ற ரஜினிகாந்த், விமானநிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் இதனை குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து தலைவர் 171 படம் குறித்தும் பேசியிருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் வேட்டையன் படப்பிடிப்பின் ஐதராபாத் ஷெட்யூலை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய அவர் வேட்டையன் படத்தின் வேலைகள் நன்றாக போய்க் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

நோ அரசியல் கேள்விகள்: தொடர்ந்து தமிழக அரசியல் குறித்தும் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், அரசியல் கேள்விகளுக்கு தான் பதில் சொல்ல மாட்டேன் என்று உறுதியுடன் கூறிவிட்டு காரில் ஏறி புறப்பட்டு சென்று விட்டார். ஜெயிலர், லால் சலாம் என அடுத்தடுத்து படங்களில் நடித்துள்ள ரஜினிகாந்த் நடிப்பில் இந்த ஆண்டிலேயே வேட்டையன் படம் வெளியாகவுள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். முன்னதாக இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பொங்கலையொட்டி வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படத்திற்கான எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.

ரஜினிகாந்த் -அமிதாப் பச்சன் கூட்டணி: கடந்த டிசம்பரில் ரஜினியின் பிறந்தநாளையொட்டி இந்தப் படத்தின் டைட்டில் டீசரும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்தப் படத்தில் 33 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் இணைந்து நடித்துள்ளனர். முன்னதாக கடந்த 1991ம் ஆண்டில் வெளியான ஹம் என்ற படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் முன்னதாக மும்பையில் எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த கட்ட சூட்டிங்கிலும் இவர்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லைகா தயாரிப்பில் உருவாகிவரும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X