Rajinikanth: வேட்டையன் படத்தின் 75% சூட் ஓவர்.. விரைவில் ரிலீஸ் அப்டேட்.. ரஜினிகாந்தே சொன்ன தகவல்!
சென்னை: நடிகர் ரஜினியின் அடுத்தடுத்த படங்கள் ஏராளமான ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்து வருகின்றன. 70 வயதை கடந்த நிலையிலும் சுறுசுறுப்பாக அடுத்தடுத்த படங்களில் தன்னை இணைத்து சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். சூப்பர் ஸ்டார், தலைவர் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினியின் ஜெயிலர் படம் வெளியாகி மிகச்சிறப்பான வரவேற்பையும் 600 கோடிகளுக்கும் மேல் வசூலையும் பெற்ற நிலையில், கடந்த பிப்ரவரியில் வெளியான லால் சலாம் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இருந்தாலும் இந்தப் படத்தில் ரஜினியின் கேரக்டர் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அவரது 170வது படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் அடுத்தடுத்த சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தின் சூட்டிங்கை இந்த மாதத்திற்குள் நிறைவு செய்ய இயக்குநர் டிஜே ஞானவேல் திட்டமிட்டு அதற்கேற்ப அடுத்தடுத்த கட்ட ஷெட்யூல்களை திட்டமிட்டு வருகிறார். அடுத்தக்கட்ட சூட்டிங் தறபோது ஐதராபாத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து இரு வாரங்களுக்கு இந்த சூட்டிங் தொடர்ந்து நடக்கவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் சிறப்பான வெற்றியை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதத்தில் அவரது லால் சலாம் படம் ரிலீசானது. இந்தப் படத்தில் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் கேமியோ ரோலில்தான் ரஜினிகாந்த் நடித்திருந்தார். அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது. இருந்தபோதிலும் ரஜினியின் கேரக்டருக்கு ரசிகர்கள் அதிகமான வரவேற்பை கொடுத்திருந்தனர். படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், நிரோஷா, செந்தில் உள்ளிட்ட நடிகர்கள் இணைந்து மாஸ் காட்டியிருந்தனர்.
வேட்டையன் படம்: இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் தன்னுடைய 170வது படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் டைட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ரஜினியின் பிறந்தநாளையொட்டி வெளியான இந்த டைட்டில் அவரது முந்தைய படமான சந்திரமுகி படத்தின் கேரக்டராக அமைந்துள்ளது. படத்திற்கு வேட்டையன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த செய்தியாளர்களிடம் ரஜனிகாந்த் பேசியுள்ளார்.
ரஜினிகாந்த் பேட்டி: படத்தின் சூட்டிங் 75 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாகவும் படத்தின் சூட்டிங் நிறைவடைந்தவுடன் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அடுத்தப்படமான தலைவர் 171 படத்தின் வேலைகள் துவங்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், இன்னும் துவங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் அடுத்ததாக ஐதராபாத்தில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அங்கு இரு வாரங்கள் இந்தப் படத்தின் சூட்டிங் தொடர்ந்து நடக்கும் என்றும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் சூட்டிங்: படத்தின் 75 சதவிகித சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், ஐதராபாத்தில் படத்தின் மீதமுள்ள காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாகவும் இந்த மாதத்திற்குள் படத்தின் சூட்டிங் நிறைவடையவுள்ளதாகவும் தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து படத்தின் அடுத்தடுத்த கட்ட அப்டேட்களை எதிர்பார்க்கலாம். லைகா தயாரிப்பில் உருவாகிவரும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். படம் தீபாவளியையொட்டி ரிலீசாகவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் ரஜினியுடன் மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன், பகத் பாசில் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











