Pahalgam Attack: கனவிலும் நினைத்து பார்க்க முடியாத.. கண்கள் சிவந்த ரஜினிகாந்த்
சென்னை: ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் நகரில் உள்ள பைசரன் புல்வெளி பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் கடந்த 22ஆம் தேதி துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவத்தில் 26 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்திருக்கின்றனர். இந்த சம்பவம் இந்திய நாட்டையே கவலைக்குள்ளாக்கியிருக்கிறது. இதற்கு திரை பிரபலங்கள் பலரும் சமூகவலைதளங்களில் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் கடுமையாக பேசியுள்ளார்.
பஹல்காம் தாக்குதல் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருப்பது மட்டுமின்றி பயங்கரவாத செயல்களை கண்டித்தும் குரல்கள் ஓங்கி ஒலித்து வருகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த சம்பவத்தில் தப்பித்து வந்த மக்கள் பலரும் இஸ்லாமியர்களால் தான் நாங்கள் உயிர் தப்பித்தோம் என்றும் தெரிவித்தனர். உயிர் தப்பித்தவர்கள் அளித்த பேட்டியும் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், நடிகை ஆண்ட்ரியா மத வெறுப்பை திணிக்க வேண்டாம். மக்களுக்கு நல்வழிப்படுத்தும் கருத்துக்களை விதைப்போம் என தெரிவித்திருந்தார். அதேபோன்று நடிகர்கள் சூர்யா, சாந்தனு, விஷால் ஆகியோர் தங்களது கருத்துக்களை சமூகவலைதளத்தில் பகிர்ந்தனர்.

பிரபலங்கள்: நடிகர் கமல்ஹாசன் "பஹல்காம் தாக்குதலை நான் வன்மையாக கண்டிக்கிறேன்" என பதிவிட்டுள்ளார். மேலும் மலையாள நடிகர் மோகன்லால், "அப்பாவி உயிர்களை பறிப்பதை, எந்த ஒரு காரணத்தினாலும் நியாயப்படுத்த முடியாது" என குறிப்பிட்டுள்ளார். மேலும், கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கடுமையாக தாக்கி பேசியிருந்தார். 78 ஆண்டுகளாக சண்டை போ்டடு என்ன சாதித்தீர்கள்.ஒரு மில்லி மீட்டர் இடம் கூட கைமாறவில்லை. அடுத்த 78,000 ஆண்டுகளுக்கும் எதுவும் மாறப்போவதும் இல்லை என தெரிவித்திருந்தார்.
ரஜினிகாந்த் கண்டனம்: ஜெயிலர் படப்பிடிப்பை முடித்து விட்டு இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்த ரஜினிகாந்தை செய்தியாளர்கள் சூழ்ந்துகொண்டனர். அப்போது சிரித்தபடியே செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடந்து முடிந்திருக்கிறது. 2வது கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளதாகவும் தெரிவித்தார். பின்னர், அவரிடம் செய்தியாளர்கள் பகல்காம் தாக்குதல் குறித்து கேள்வி கேட்டனர். அப்போது அவரது முகம் மாறியது. பின்னர் பதில் அளித்த ரஜினிகாந்த், ஜம்மு காஷ்மீரில் நடந்த தாக்குதல் நிலைகுலைய வைத்திருக்கிறது. இந்த செய்தி கேட்டு ரொம்பவே அதிர்ச்சியடைந்தேன். இந்த பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கனவிலும் நினைத்து கூட பார்க்காத தண்டனை வழங்கப்பட வேண்டும் என கோபத்துடன் பேசினார்.
ரஜினிகாந்தை பார்த்த ரசிகர்கள்: செய்தியாளர்களை சந்தித்து விட்டு விமானத்திற்குள் சென்ற ரஜினிகாந்தை பார்த்த ரசிகர்கள் ஓ மை காட் என ஆச்சர்யமடைந்தனர். ரஜினி சிரித்தபடியே ரசிகர்களை பார்த்து விமானத்திற்குள் கையசைத்தார். அதை பார்த்து ரசிகர்கள் கத்த தொடங்கினர். ரஜினி சார் என்றும் கூப்பிட தொடங்கினர். தலைவரை பார்த்துவிட்டோம். தலைவர் தரிசனம் செம சர்ப்ரைஸ் என்றும் தெரிவித்தனர். மேலும், ரஜினிகாந்த் விமானத்திற்குள் வந்து செல்லும் வீடியோவை ரசிகர் ஒருவர் மறைமுகமாக எடுத்து தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை நெட்டிசன்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











