Rajinikanth: கூலி பட சூட்டிங் எப்ப துவங்குது தெரியுமா.. என்னது படத்தில் ரஜினிக்கு ஜோடி இல்லையா?
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் டிஜே ஞானவேல் இயக்கத்தில் நடித்து வந்த வேட்டையன் படத்தின் சூட்டிங் நேற்றைய தினம் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி ரஜினிக்கு படக்குழுவினர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த சூழலில், வரும் ஜூன் மாதத்தில் ரஜினிகாந்த் அடுத்ததாக கூலி படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார்.
வேட்டையன் படத்தை நிறைவு செய்துவிட்டு மூன்றே வாரங்களில் அவர் அடுத்ததாக கூலி படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார். தன்னுடைய 73 வயதிலும் ரஜினிகாந்த் அடுத்தடுத்த படங்களில் சுறுசுறுப்பாக தன்னை இணைத்து வருவது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சக இளம் நடிகர்களுக்கு உத்வேகத்தையும் ரஜினி தொடர்ந்து கொடுத்து வருகிறார். கூலி படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை கோலிவுட்டில் ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த். டிஜே ஞானவேல் இயக்கத்தில் நடித்துவந்த வேட்டையன் படத்தின் ஷூட்டிங்கை நேற்றைய தினம் நிறைவு செய்துள்ளார். இதையடுத்து படக்குழுவினர் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை பகிர்ந்திருந்தனர். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தது. இடையில் மூன்று வாரங்கள் இடைவெளி எடுத்துக் கொள்ளும் நடிகர் ரஜினிகாந்த், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் இணையவுள்ளார். இந்த படத்தின் சூட்டிங் ஜூன் மாதத்தில் துவங்க உள்ளதாக முன்னதாக லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்த சூழலில் தற்போது ஜூன் 6-ம் தேதி இந்த படத்தின் சூட்டிங் சென்னையில் துவங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கூலி படம்: இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட நாயகிகள் நடிக்க கமிட்டாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் நாயகிகளுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டு கேரக்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக லோகேஷ் கனகராஜ் முன்னதாக தெரிவித்திருந்த சூழலில், படத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு ஜோடியில்லை என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக லோகேஷ் இயக்கத்தில் வெளியான கைதி பட ஸ்டைலில் கூலி படமும் உருவாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கூலி படத்தின் சூட்டிங் தொடர்ந்து ரிலாக்ஸாக எடுக்கப்பட்டு அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக படம் ரிலீசாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ரஜினியின் சுறுசுறுப்பு: முன்னதாக ஜெயிலர் படத்தில் இருந்தது போலவே ஒவ்வொரு இண்டஸ்ட்ரியில் இருந்தும் மாஸான நடிகர்கள் கூலி படத்தில் இணைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 73 வயதான ரஜினிகாந்த், தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் தன்னை இணைத்து வருகிறார். இந்த வயதிலும் அவரது சுறுசுறுப்பு ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும் சக இளம் நடிகர்களுக்கு உத்வேகத்தையும் ஏற்படுத்தி வருகிறது. வேட்டையன் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்தப் படம் மிகச் சிறப்பாக உருவாகியுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.
கூலி படத்தில் ரஜினி சம்பளம்: இதனிடையே கூலி படமும் ரஜினியை வித்தியாசமாக காட்டும் என்று முன்னதாக லோகேஷ் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு 260 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல லோகேஷ் கனகராஜிற்கு 60 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் நெகட்டிவ் ஷேட் மற்றும் பாசிட்டிவ் ஷேடுடன் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தங்க கடத்தலை மையமாக வைத்து இந்த படம் உருவாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன


Click it and Unblock the Notifications











