Rajinikanth: அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்.. வைரலாகும் ரஜினி பட பாடல் வரிகள்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள தலைவர் 171 படத்தின் டைட்டில் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. படத்திற்கு கோல்ட், ராணா உள்ளிட்ட பல டைட்டில்கள் குறித்து தொடர்ந்து தகவல்கள் வெளியான நிலையில், சற்றும் யோசிக்காதவகையில் தற்போது கூலி என்று படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான டைட்டில் டீசரும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த டைட்டில் டீசர் மாஸான வகையில் வெளியாகியுள்ளது. முன்னதாக பர்ஸ்ட் லுக்கில் இடம்பெற்றது போல இந்த டைட்டில் டீசரிலும் வாட்ச்களால் வித்தை காட்டப்பட்டுள்ளது. மேலும் அப்பாவும் தாத்தாவும வந்தார்கள் போனார்கள் என்ற ரஜினியின் முந்தைய படத்தில் இடம்பெற்றிருந்த டயலாக்கும் இந்த ப்ரோமோவில் இடம் பெற்றுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்தின் நினைத்தாலே இனிக்கும் படம் அவருக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த படங்களில் ஒன்று. கமல்ஹாசனுக்கு வில்லனாகவே நடித்துவந்த ரஜினி, இந்தப் படத்தில் அவருக்கு உற்ற நண்பனாக நடித்திருந்தார். ஜெயப்பிரதாவுடனான கமல்ஹாசனின் காதல் போராட்டத்திற்கு துணை நிற்பவராக நடித்திருந்தார் ரஜினிகாந்த். இந்தப் படத்தில்தான் ஜெகமே தந்திரம் என்ற பாடலுக்கு சோலோவாக ஆட்டம் போட்டிருப்பார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் சினிமா கேரியரில் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பங்குண்டு. இந்தப் பாடலில்தான் அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள் என்ற வரிகள் சரணத்தில் இடம்பெற்றிருக்கும்.

ரஜினி பட டயலாக்: இந்தப் பாடலில் மட்டுமில்லாமல் தனியாக டயலாக்காகவும் இந்த வசனங்களை அவர் பேசியுள்ளார். தற்போது பல ஆண்டுகளை கடந்து இந்த டயலாக்கை அவர் தனது தலைவர் 171 படத்திற்காக மீண்டும் ரிவைண்ட் செய்துள்ளார். இன்றைய தினம் இந்தப் படத்தின் டைட்டில் ப்ரோமோ வெளியாகியுள்ளது. படத்திற்கு கூலி என்று பெயரிடப்பட்டுள்ளது. முன்னதாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி படத்தின் டைட்டில் குறித்த பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியிருந்த சூழலில் எதிர்பார்க்காததைதான் எதிர்பார்க்க வேண்டும் என்று முன்னதாக லோகேஷ் கனகராஜ் கூறியிருந்ததற்கு இணங்க படத்தின் டைட்டில் கூலி என்று வைக்கப்பட்டுள்ளது.
கூலி பட டைட்டில்: லோகேஷின் முந்தைய படங்களை போலவே இந்தப் படத்தின் டைட்டில் டீசரும் மிகவும் மிரட்டலாக வெளியாகியுள்ளது. படத்தில் அடுத்தடுத்த விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தங்க குடோன் போன்ற ஒரு இடத்தில் புகுந்து எதிரிகளை பந்தாடுகிறார் ரஜினிகாந்த். இங்கும் வாட்ச்களால் ஆன சங்கிலி காட்டப்படுகிறது. தப்பென்ன சரியென்ன எப்போதும் விளையாடு என்று கூறியபடி எதிரிகளிடம் மோதுகிறார். தொடர்ந்து D-I-S-C-O டிஸ்கோ என்றும் இசைக்கப்படுகிறது. தொடர்ந்து தன்னுடைய கூலி பேட்ஜை ரஜினிகாந்த் துடைப்பதாகவும் காணப்படுகிறது. தமிழில் முன்னதாக கூலி என்ற படம் வெளியான சூழலில் மீண்டும் இந்த டைட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்தில் சூட்டிங்: தற்போது இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளின் இறுதிக்கட்ட பணிகளுக்காக மங்களூர் சென்றுள்ளார் லோகேஷ் கனகராஜ். விரைவில் இந்த பணிகளை முடித்துக் கொண்டு சென்னை திரும்பவுள்ளார். இதையடுத்து வரும் ஜூன் மாதத்தில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் ஸ்ருதிஹாசன், நாகார்ஜூனா உள்ளிட்ட நடிகர்கள் இணைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இன்றைய தினமே நடிகர்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் விரைவில் இதுகுறித்த அறிவிப்பை லோகேஷ் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











