Rajinikanth: தமிழ் புத்தாண்டில் ரஜினி படங்களின் அடுத்தடுத்த அப்டேட்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் குறுகிய இடைவெளிகளில் ரிலீசாகி வருகின்றன. 70 வயதை கடந்த நிலையிலும் அவரது எனர்ஜி பார்ப்பவர்களுக்கும் பற்றிக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. பொதுவெளிகளிலும் அவரது சுறுசுறுப்பு அட போட வைக்கிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படம் அவருக்கு சிறப்பாக அமைந்த நிலையில், கடந்த பிப்ரவரியில் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரிலீசான லால் சலாம் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆயினும் படத்தில் ரஜினி ஏற்றிருந்த மொய்தீன் பாய் கேரக்டர் ஏராளமான ரசிகர்களிடையே சபாஷ் போட வைத்தது.
இந்தப் படங்களை தொடர்ந்து தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்திற்காக ஐதராபாத், சென்னை என மாறி மாறி சூட்டிங்கில் பங்கேற்று வருகிறார். 80 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளதாக தனது சமீபத்திய பேட்டியில் ரஜினிகாந்த் குறிப்பிட்டிருந்தார். இந்தப் படத்தின் சூட்டிங் இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத துவக்கத்தில் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் இணையவுள்ளார் ரஜினிகாந்த். படத்தின் சூட்டிங் ஜூன் மாதத்தில் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் 70 வயதை கடந்த நிலையிலும் இளம் நடிகர்களுக்கு உத்வேகமாக அமைந்து வருகிறார். இந்த வயதிலும் அவரது சுறுசுறுப்பு அனேகமானோரை கவர்ந்து வருகிறது. இந்த வயதிலும் தன்னுடைய தலைவர் மற்றும் சூப்பர்ஸ்டார் பட்டங்களுக்கு சிறப்பாக பொருந்தி வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்திருந்த ஜெயிலர் படம் மிகச்சிறப்பாக அமைந்தது. இந்தப் படம் வசூல்ரீதியாகவும் விமர்சனரீதியாகவும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து அவரது மூத்த மகள் இயக்கத்தில் கடந்த பிப்ரவரியில் வெளியான லால் சலாம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும், அவரது மொய்தீன் பாய் கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
வேட்டையன் பட சூட்டிங்: இந்தப் படங்களை தொடர்ந்து தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்தப்படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது. படத்தின் 80 சதவிகித சூட்டிங் நிறைவடைந்ததாக ரஜினிகாந்த் சில தினங்களுக்கு முன்பு அப்டேட் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத துவக்கத்தில் நிறைவடையும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன், ரித்திகா சிங் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
ஜூன் மாதத்தில் துவங்கும் தலைவர் 171: வேட்டையன் படம் தீபாவளி ரிலீசாக வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்தப் படத்தை முடித்துக் கொண்டு ரஜினிகாந்த், அடுத்ததாக தலைவர் 171 படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் இணையவுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் ஏப்ரல் மாதத்திலேயே துவங்கவுள்ளதாக முன்னதாக கூறப்பட்ட நிலையில், தற்போது படத்தின் சூட்டிங் ஜூன் மாதத்தில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் தற்போது லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டுள்ளார். இந்தப் படத்தின் டைட்டில் உள்ளிட்டவை விரைவில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அடுத்தடுத்த படங்களின் அப்டேட்: இதுகுறித்து சமீபத்தில் பேட்டியொன்றில் பேசியுள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தின் டைட்டில் டீசர் ஏப்ரல் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனிடையே, வரும் தமிழ் புத்தாண்டையொட்டி இந்தப் படத்தின் டைட்டில் டீசர் வெளியாகவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே வேட்டையன் படத்தின் ரிலீஸ் அப்டேட்டும் தமிழ் புத்தாண்டையொட்டியே வெளியாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஒரே நாளில் ரஜினியின் அடுத்தடுத்த படங்களின் அப்டேட் வெளியாகவுள்ளது அவரது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications











