Rajinikanth: சென்னையில் நடக்கும் வேட்டையன் படத்தின் சூட்டிங்.. சூப்பர்ஸ்டார் லேட்டஸ்ட் கிளிக்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தை இயக்கி வருகிறார் டிஜே ஞானவேல். இவரது இயக்கத்தில் முன்னதாக வெளியான ஜெய் பீம் படம் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தையடுத்து தற்போது ரஜினிகாந்த், மஞ்சு வாரியர், ராணா டகுபாட்டி, பகத் ஃபாசில், ரித்திகா சிங் உள்ளிட்டவர்கள் இணைந்துள்ள வேட்டையன் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் பாடல் காட்சி தற்போது படமாக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
விரைவில் வேட்டையன் படத்தின் சூட்டிங், நிறைவடைய உள்ளதாகவும் படக்குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் போலி என்கவுண்டருக்கு எதிரான கதையை மையமாகக் கொண்டு உருவாகி வருவதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. படம் தீபாவளியையொட்டி ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் வேட்டையன்/ கடந்த ஆண்டில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் மிகப்பெரிய ஹிட்டிடித்தது. 600 கோடி ரூபாய்களை தாண்டி இந்த படம் வசூலித்த சூழலில் கடந்த பிப்ரவரி மாதத்தில் தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்திருந்தார் ரஜினிகாந்த். இந்தப் படத்தில் கேமியோ ரோலில் ரஜினிகாந்த், நடித்திருந்த சூழலில் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தொடர்ந்து தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார்.
வேட்டையன் படம்: இந்தப் படத்தில் ரஜினிகாந்த்துடன் அமிதாபச்சன், மஞ்சுவாரியர், ராணா டகுபாட்டி, ரித்திகா சிங் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது சென்னையில் நடந்து வருகிறது. விரைவில் படத்தின் சூட்டிங் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஷூட்டிங் 100 நாட்களை கடந்துள்ளதாக சமீபத்தில் படக்குழு சார்பில் சமூக வலைதளங்களில் தெரிவிக்கப்பட்டது. மேலும் சென்னையில் இந்த படத்தின் சூட்டிங் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. தற்போது ரஜினிகாந்த் மற்றும் மஞ்சு வாரியர் இணைந்துள்ள பாடல் காட்சியின் சூட்டிங் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
ரஜினி -மஞ்சு வாரியர் பாடல்காட்சி: மலையாள ஸ்டைலில் இந்த பாடல் காட்சி நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே வேட்டையன் படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் ரஜினி எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் நிறைவடையுள்ள சூழலில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தின் ஷூட்டிங்கில் வரும் ஜூன் மாதம் முதல் ரஜினிகாந்த் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த்துடன் ஸ்ருதிஹாசன், ஷோபனா, நாகார்ஜுனா உள்ளிட்ட நடிகர்கள் இணைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கூலி படத்தின் நடிகர்கள்: ஆனால் கூலி படத்தின் நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை. விரைவில் படத்தின் நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் நெகட்டிவ் ஷேடில் நடிக்கவுள்ளதாக முன்னதாக பேட்டியொன்றில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்புகளையும் எகிற செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











