Actor Rajinikanth: பணமும் முக்கியம்.. அவார்டும் முக்கியம்.. தெளிவாத்தான் இருக்காரு சூப்பர்ஸ்டார்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினியின் இயக்கத்தில் இணைந்துள்ள படம் லால் சலாம். கிரிக்கெட்டை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள நிலையில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கேமியோ கேரக்டரில் நடித்துள்ளார். படத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் கபில் தேவும் கேமியோ ரோலில் நடித்துள்ளார். முன்னதாக 3, வை ராஜா வை படங்களின்மூலம் கவனம் பெற்ற ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் லால் சலாம் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் குவித்த நிலையில், அடுத்ததாக அவர் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் இன்னும் இரு மாதங்களில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்கவும் கமிட்டாகியுள்ளார். அடுத்தடுத்த லீட் கேரக்டர்களில் ரஜினிகாந்த் நடித்துவரும் நிலையில், லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. படத்தில் அவரது கேரக்டர் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகியுள்ளது. லைகா தயாரிப்பில் இந்தப் படம் மிகச்சிறந்த வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் கொடுத்த உற்சாகத்தில் அவர் அடுத்தடுத்தப் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினியின் லால் சலாம் படத்தில் கேமியோ கேரக்டரில் நடித்துள்ள ரஜினிகாந்த், அடுத்ததாக ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் இணையவுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் ஏப்ரல் மாதத்தில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டுள்ளார். விரைவில் படத்தின் சூட்டிங் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
லால் சலாம் படம்: ஜெயிலர் படத்தை தொடர்ந்து ரஜினியின் லால் சலாம் படம் வெளியாகவுள்ளது. பொங்கலையொட்டி இந்தப் படம் ரிலீசாகவிருந்த நிலையில், ரிலீஸ் தேதி பிப்ரவரி 9ம் தேதிக்கு தள்ளிப் போயுள்ளது. படத்தில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். அவரது இசையில் முன்னதாக வெளியான பாடல்கள் அதிக கவனத்தை பெற்றுள்ளன. இந்தப் படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் நேற்றைய தினம் சென்னையில் படத்தின் இசை வெலளியீடு பிரம்மாண்டமான அளவில் நடந்தது. இதில் ரஜினி, ஐஸ்வர்யா உள்ளிட்ட படக்குழுவினர் மற்றும் கேஎஸ் ரவிக்குமார், நெல்சன், லதா ரஜினிகாந்த், சவுந்தர்யா ரஜினிகாந்த் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.
லால் சலாம் இசை வெளியீடு: நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்தின் பேச்சை கேட்பதற்காக ஏராளமான ரசிகர்கள் காத்திருந்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் மேடையேறி பேசிய ரஜினிகாந்த், பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார். முன்னதாக இந்தக் கதையை தன்னிடம் ஐஸ்வர்யா கூறியபோது, படத்திற்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும் என்று தன்னிடம் தெரிவித்ததாக கூறினார். நான் தேசிய விருதுக்கு எதிரானவன் இல்லை என்றபோதிலும் இந்தக் கருத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார். படத்தின் வசூல் மிகவும் முக்கியமானது என்று கூறிய ரஜினிகாந்த், விருதுகளும் முக்கியம்தான் என்றும் கூறினார்.
உடனே ஓகே சொன்ன ரஜினி: கதையை கேட்டவுடன் தான் உடனடியாக நடிக்க ஓகே சொன்னதாகவும் ரஜினி இந்த பேச்சின்போது குறிப்பிட்டுள்ளார். முன்னதாக பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இந்தக் கதையை கேட்டதும் மதம் சம்பந்தப்பட்டது என்றுகூறி அனைவரும் நிராகரித்ததாகவும் அப்பாவிடம் கதையை சொன்னவுடன் தானே நடிப்பதாக அவர் ஒப்புதல் கொடுத்ததாகவும் ஐஸ்வர்யா தெரிவித்தார். 35 வருடங்களாக அப்பா சேர்த்து வைத்துள்ள பெயரை உடைக்கக்கூடாது என்று தான் நினைத்ததாகவும் ஆனால் இந்தக் கதையை பிடித்து அப்பா நடிக்க விரும்பியதாகவும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











