Rajinikanth: அடுத்த வாரத்தில் நடக்கும் தலைவர் 171 ப்ரோமோ வீடியோ சூட்.. என்ன சொல்லப்போறாரு ரஜினிகாந்த்

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தின் சூட்டிங் தற்போது சென்னையின் ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வருகிறது. டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் இந்த மாதத்திற்குள் நிறைவடைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் நடித்து வருவதாக கூறப்பட்டுள்ள நிலையில் போலி என்கவுண்டருக்கு எதிரான கதைக்களத்துடன் இந்தப் படம் உருவாகிவருவதாக அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜுடன் இணைந்து தலைவர் 171 படத்தின் ஷூட்டிங்கில் வரும் ஜூன் மாதம் முதல் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் நடிகர், நடிகைகள் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இந்த படத்தின் டைட்டில் ப்ரோமோ வரும் 22ம் தேதி வெளியாக உள்ளதாக லோகேஷ் கனகராஜ் சில தினங்களுக்கு முன்பு அப்டேட் தெரிவித்துள்ளார். இதனால் இந்த படத்தின் டீசர் எப்படி அமையும் என்பது குறித்து தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். எப்போதுமே லோகேஷ் கனகராஜ் தன்னுடைய டைட்டிலை சிறப்பான டீசருடன் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துவரும் சூழலில், இந்தப்படத்தின் டைட்டில் ப்ரோமோவும் அதே போன்று மாஸாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Actor Rajinikanth s Thalaivar 171 movie promo video shoot will start next week

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்து வெற்றிப்பட கூட்டணியுடன் இணைந்து நடித்து வருகிறார். ஜெயிலர் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்தின் வேட்டையன் படம் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையின் ஆவடி உள்ளிட்ட இடங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்தப்படத்தின் ஷூட்டிங்கை இந்த மாதத்திற்குள் நிறைவு செய்ய டிஜே ஞானவேல் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். இந்தப்படத்தை தொடர்ந்து வரும் ஜூன் மாதத்தில் தலைவர் 171 படத்தின் ஷூட்டிங் துவங்க உள்ளதாக முன்னதாக லோகேஷ் கனகராஜ் தனது பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

தலைவர் 171 படம்: இந்தப்படத்தின் ஷூட்டிங் முன்னதாக ஏப்ரல் மாதத்திலேயே துவங்கவிருந்த நிலையில் ஸ்கிரிப்ட் வேலைகளுக்காக 5 -6 மாதங்களை தான் எடுத்துக் கொண்டதாகவும் அதனால் படத்தின் சூட்டிங் ஜூன் மாதத்தில் துவங்க உள்ளதாகவும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். தொடர்ந்து ஏப்ரல் மாதத்திலேயே இந்த படத்தின் டைட்டில் ப்ரமோ வெளியாக உள்ளதாக முன்னதாக தெரிவித்திருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வரும் 22ம் தேதி இந்த படத்தின் டைட்டில் பிரமோ வெளியாகவுள்ளதாக சமூகவலைதளம் மூலமாக தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பு ரஜினி ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆர்வத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

22ம் தேதி வெளியாகும் டைட்டில் ப்ரமோ: மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள தலைவர் 171 படத்தின் டைட்டில் பிரமோ எப்படி அமையும் என்பது குறித்து தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். முன்னதாக லோகேஷ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தின் டைட்டில் பிரமோவில் கமல்ஹாசன் பேசிய ஆரம்பிக்கலாங்களா என்ற வசனம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. இதே போல கடந்த ஆண்டில் வெளியான லியோ படத்தின் டைட்டில் ப்ரோமோவில் விஜய் பேசிய பிளடி ஸ்வீட் வசனம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் தற்போது உருவாகவுள்ள தலைவர் 171 படத்தின் டைட்டில் புரோமோவில் ரஜினிகாந்த் இதுபோன்று என்ன டயலாக்கை பேசுவார் என்று தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

டைட்டில் ப்ரோமோ சூட்டிங்: இந்நிலையில் இந்த டைட்டில் ப்ரோமோவிற்கான சூட்டிங் அடுத்த வாரத்தில் நடக்க உள்ளதாக பட குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 22ம் தேதி மாலை 6 மணியளவில் இந்த டைட்டில் ப்ரமோ வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த போஸ்டரில் கையில் வாட்ச்களாலான விலங்கை போட்டிருந்தார் ரஜினிகாந்த். இந்நிலையில் இதேபோல டைட்டில் ப்ரோமோவும் வித்தியாசமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X