Thalaiva 171: அடுத்த மாதம் வெளியாகும் தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசர்.. சூட்டிங் எப்ப தெரியுமா?

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் விரைவல் நிறைவடையவுள்ள நிலையில், ஐதராபாத், திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. சமூக அக்கறையுடன் இந்தப் படத்தின் கதைக்களத்தை ஞானவேல் உருவாக்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் 80 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் உறுதிப்படுத்தியிருந்தார். படம் தீபாவளி ரிலீசாக வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்த மாதத்திலேயே தலைவர் 171 படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் தற்போது படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டுள்ளார். இதன் வேலைகள் விரைவில் நிறைவு செய்யப்பட உள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். முன்னதாக ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் மற்றும் லால் சலாம் படங்களை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி அவர் நடித்து வருகிறார்.

Actor Rajinikanth s Thalaivar 171 movie title teaser to be announced next month

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர், லால் சலாம் படங்களை தொடர்ந்து தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். சமூக அக்கறையுடன் இந்தப் படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் 80 சதவிகிதத்தை கடந்துள்ள நிலையில் விரைவில் படத்தின் ஷூட்டிங் நிறைவடைய உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. ரஜினிகாந்த்தும் தனது சமீபத்திய பேட்டியொன்றில் படத்தின் சூட்டிங் 80 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

தலைவர் 171 படம்: இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்க ரஜினிகாந்த் கமிட்டாகியுள்ளார். இந்த படத்தின் சூட்டிங் ஏப்ரல் மாதத்தில் துவங்க உள்ளதாக முன்னதாக கூறப்பட்டிருந்தது. இதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் சூட்டிங் மே அல்லது ஜூன் மாதத்தில் தான் துவங்கும் என்று தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தாலும் அவர்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கு அடுத்தடுத்த விஷயங்களை படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றன .

அடுத்த மாதத்தில் வெளியாகும் டைட்டில் டீசர்: இந்த படத்தின் டைட்டில் டீசர் அடுத்த மாதம் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்த மாதம் தமிழ் புத்தாண்டையொட்டி தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. அடுத்த மாதத்திலேயே இந்த படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள், நடிகைகள் குறித்த தகவல்களும் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த படம் பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தியில் ரிலீசாக திட்டமிடப்பட்டுள்ள நிலையில் படத்தில் பல பான் இந்தியா நடிகர்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது குறித்து தனது சமீபத்திய பேட்டியில் லோகேஷ் கனகராஜூம் உறுதிப்படுத்தியுள்ளார்.


இன்டஸ்ட்ரியல் ஹிட்டாகுமா தலைவர் 171?: நடிகர் ரஜினிகாந்தை தன்னுடைய தலைவர் 171 படத்தில் வித்தியாசமாக காட்டவுள்ளதாக முன்னதாக பேட்டியொன்றில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருநதார். இதனால் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கியிருந்த லோகேஷ் கனகராஜ், படத்தை இன்டஸ்ட்ரியல் ஹிட்டாக்கியிருந்தார். விஜய்யுடன் அவர் இணைந்திருந்த லியோ படம் கடந்த ஆண்டில் வெளியாகி வசூலில் சாதனை செய்தது. இருந்தபோதிலும் கலவையான விமர்சனங்களை இந்தப் படம் பெற்றது. இந்நிலையில் ரஜினிகாந்துடன் லோகேஷ் இணையவுள்ள இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X