Rajinikanth: 100 நாட்கள் சூட்டிங்கை முடித்த வேட்டையன்.. அதிரடி சரவெடியாக இன்ட்ரோ பாடல்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். அவருடன் அமிதாபச்சன், பகத் பாசில், ராணா டகுபாட்டி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் இணைந்துள்ளன. ஜெய் பீம் படம் மூலம் மிகப் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்த இயக்குனர் டிஜே ஞானவேல் இந்த படத்தை இயக்கி வருகிறார். படத்தின் சூட்டிங் அடுத்த மாதத்திற்குள் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக ஜூன் மாதத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் ரஜினிகாந்த் இணையவுள்ளார். இந்தப் படத்தின் டைட்டில் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ப்ரோமோ படம் குறித்த மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Actor Rajinikanth s Vettaiyan movie 100 days shooting over

நடிகர் ரஜினிகாந்த்: ஜெயிலர், லால் சலாம் படங்களை தொடர்ந்து தற்போது வேட்டையன் படத்தில் டிஜே ஞானவேல் இயக்கத்தில் இணைந்து நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இந்தப் படத்தில் அவருடன் 30 ஆண்டுகளை கடந்து நடிகர் அமிதாப் பச்சன் இணைந்துள்ளார். மேலும் படத்தில் ராணா டகுபாட்டி, மஞ்சு வாரியர், ஃபகத் பாசில், ரித்திகா சிங் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளன. இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே இந்தப் படத்தின் சூட்டிங் இதுவரை 100 நாட்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

ரஜினிகாந்தின் இன்ட்ரோ பாடல்: மேலும் தற்போது நடிகர் ரஜினிகாந்தின் இன்ட்ரோ பாடலுக்கான சூட்டிங் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தின் பாடல்கள் வழக்கம் போல மாஸாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லைகா தயாரித்து வரும் இந்தப் படம் அக்டோபர் மாதத்தில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் அடுத்த மாதத்திற்குள் இந்த படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்ய படக்குழு திட்டமிட்டு அதற்கேற்ப ஷூட்டிங்கை தொடர்ந்து வருகிறது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் ரஜினிகாந்த்.

வேட்டையன் படம்: 70 வயதை கடந்த போதிலும் தற்போதும் சுறுசுறுப்பாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். கடந்த ஆண்டில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான ஜெயிலர் படம் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. 600 கோடி ரூபாய்களுக்கும் மேல் இந்தப் படம் வசூலித்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதத்தில் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் கேமியோ கேரக்டரில் நடித்து வெளியான படம் லால் சலாம். இந்தப் படம் கலையான விமர்சனங்களை பெற்ற சூழலில் தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

கூலி படத்தின் சூட்டிங்: இந்தப் படத்தின் சூட்டிங் ஐதராபாத், சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்து வருகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக வரும் ஜூன் மாதம் முதல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் இணையுள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் டைட்டில் ப்ரோமோ மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளன. இந்த ப்ரமோ மூலம் படத்தின் கதையை ரசிகர்கள் யூகித்து வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் எப்போதுமே தன்னுடைய படங்களில் போதை சமாச்சாரங்களை அதிகமாக பயன்படுத்தி கதைக்களத்தை அமைப்பார்.

லோகேஷ் அதிரடி: ஆனால் தொடர்ந்து விமர்சனங்களை சந்தித்த லோகேஷ் கனகராஜ், கூலி படத்தில் போதை சம்பந்தப்பட்ட காட்சி அமைப்புகள் இருக்காது என்றும் இதுவரை இல்லாத வகையில் ரஜினிகாந்த்தை திரையில் காட்ட உள்ளதாகவும் முன்னதாக பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்தில் நெகட்டிவ் ஷேடுடன் ரஜினி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவை அனைத்தும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து வருகிறது,

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X