Actor Rajinikanth: தொடர்ந்து நடக்கும் ரஜினி படத்தின் சூட்டிங்.. இன்னும் ஒரு மாத சூட்டிங் இருக்காம்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர், லால் சலாம் படங்களை தொடர்ந்து தற்போது அவரது நடிப்பில் டிஜே ஞானவேல் இயக்கிவரும் படம் வேட்டையன். இந்தப் படத்தின் சூட்டிங் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தின் சூட்டிங் இந்த மாதத்திற்குள் நிறைவடையவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. குறைவான பட்ஜெட்டில், குறைவான நாட்களில் இந்தப் படத்தின் சூட்டிங் திட்டமிடப்பட்டிருந்தது. படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்வருகிறார் ரஜினிகாந்த். படத்தில் என்கவுண்டரை மையமாக வைத்து திரைக்கதை அமைந்துள்ளது. படத்தில் ரஜினியின் கேரக்டர் மாஸா அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இம்மாதத்திற்குள் இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு வரும் ஏப்ரல் மாதத்தில் தலைவர் 171 படத்தின் சூட்டிங்கில் ரஜினிகாந்த் இணையவுள்ளதாக கூறப்பட்டது. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள நிலையில் தற்போது சென்னையில் இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். இந்தப் படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டிலேயே வெளியான நிலையில், விரைவில் சூட்டிங் குறித்த அறிவிப்பை படக்குழு மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் கல்வி தொடர்பான கதைக்களமும் அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Actor Rajinikanths Vettaiyan movie shooting extended for another month

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்த சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். அவரது படங்கள் கலவையான விமர்சனங்களை பெறும் நிலையிலும் வசூலில் என்றுமே பின்தங்கியதில்லை. அந்த வகையில் அடுத்தடுத்து அண்ணாத்தே, ஜெயிலர் படங்கள் சிறப்பான வசூலை பெற்றிருந்தன. ஆனால் தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் கேமியோ ரோலில் ரஜினிகாந்த் நடித்து கடந்த 9ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான லால் சலாம் படம் அவருக்கு கலவையான விமர்சனங்களையே பெற்றுத் தந்துள்ளது. வசூலிலும் எதிர்பார்த்த அளவிற்கு இந்தப் படம் சரியாக போகவில்லை.

வேட்டையன் படம்: இந்நிலையில் அடுத்ததாக டிஜே ஞானவேல் இயக்கத்தில் நடித்துவருகிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் டைட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. வேட்டையன் என்று படத்திற்கு டைட்,டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் நடித்து வருகிறார். கல்வியை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல போலி என்கவுண்டருக்கு எதிராகவும் இந்தப் படம் பேசுவதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக இம்மாதத்திற்குள் இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டிருந்தது.

இன்னும் ஒருமாத சூட்டிங்: இந்நிலையில் படத்தில் ரஜினிகாந்த் தொடர்பான போர்ஷன்களே இன்னும் 15 முதல் 20 நாட்கள் சூட்டிங் மீதமுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் மற்றவர்களின் போர்ஷன்களும் மேலும் 10 நாட்கள் தொடர்ந்து எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 80 -90 காலகட்டத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி வருகிறது. இதையொட்டி 10 -15 இடங்களில் செட்களை போட்டு படத்தின் சூட்டிங்கை இயக்குநர் எடுத்து வருவதாக படக்குழு சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து அடுத்ததாக தலைவர் 171 படத்தின் சூட்டிங் ரஜினி இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்: இரு தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த தலைவர் 171 படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை தான் மேற்கொண்டுள்ளதாகவும் விரைவில் சூட்டிங் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். முன்னதாக படத்தில் நடிகர் ரஜினியை இதுவரை இல்லாத வகையில் காட்டவுள்ளதாக அவர் கூறியிருந்தது படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. அவர் படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் படத்தில் ஸ்கிரிப்ட் வேலைகளில் அதிகப்படியான உதவி இயக்குநர்களையும் அவர் ஈடுபடுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X