Rajinikanth: விரைவில் எண்ட் கார்ட் போடும் வேட்டையன் சூட்டிங்.. தலைவர் 171 படத்திற்கு தயாராகும் ரஜினி

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக லால் சலாம் படம் ரிலீசாகவுள்ளது. வரும் பிப்ரவரி 9ம் தேதி படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. படத்தை அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். படம் இன்னும் சில தினங்களில் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீடு நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டு பல விஷயங்களை பேசினர். விஜய் குறித்து ரஜினிகாந்த் பேசியது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து டிஜே ஞானவேல் இயக்கத்தில் தன்னுடைய 170வது படத்தில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் நடிகர் ரஜினிகாந்த் இணையவுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் வரும் ஏப்ரல் மாதத்தில் துவங்கவுள்ளதாக முன்னதாக லோகேஷ் தெரிவித்திருந்தார். இதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் அவர் தற்போது ஈடுபட்டுள்ளார். விரைவில் இந்தப் பணிகள் நிறைவடையவுள்ள நிலையில், படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளில் அவர் தீவிரம் காட்டவுள்ளார்.

Actor Rajinikanths Vettaiyan movie shooting to be wrapped soon

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் சூப்பர் ஹிட்டடித்த நிலையில் அடுத்தடுத்த படங்களில் உற்சாகமாக நடித்து வருகிறார். அடுத்ததாக அவர் கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் படம் வரும் பிப்ரவரி 9ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள போதிலும் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது. இந்தப் படத்தின் பிரமோஷன்கள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

லால் சலாம் இசை வெளியீடு: கடந்த இரு தினங்களுக்கு முன்பு படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சயில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் படத்தில் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டவர்களும் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் பல சுவாரஸ்யங்களை பார்க்க முடிந்தது. படத்தில் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் ரஜினி நடித்துள்ள நிலையில், இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், நடிகர் விஜய் குறித்து பேசியது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்தப் படத்தின் கதையை கேட்டதும் தானே விரும்பி ரஜினிகாந்த் நடிக்க முன்வந்ததாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உற்சாகத்தை பகிர்ந்தார்.

கடப்பாவில் வேட்டையன் சூட்டிங்: இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் இன்றைய தினம் ஆந்திர மாநிலம் கடப்பாவில் துவங்கியுள்ளது. இன்றைய சூட்டிங்கில் ரஜினிகாந்துடன் பகத் பாசில், ராணா உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளனர். படத்தின் சூட்டிங் அடுத்த மாதத்திற்குள் முழுமையாக நிறைவடையும் என்றும் கோடைக் கொண்டாட்டமாக படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டு உழைத்து வருவதாகவும் தற்போது கூறப்பட்டுள்ளது.

பிப்ரவரியில் நிறைவடையும் வேட்டையன் சூட்டிங்: ரஜினியின் ஸ்டைலில் ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகிவரும் இந்தப் படத்தில் சமூகத்திற்கான செய்தியும் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அடுத்த மாதத்தில் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடையவுள்ள நிலையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தின் சூட்டிங்கில் ஏப்ரல் மாதத்தில் ரஜினிகாந்த் இணையவுள்ளார். இந்தப் படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளை விரைவில் நிறைவு செய்யவுள்ள நிலையில், படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகளையும் நிறைவு செய்து ஏப்ரல் மாதத்தில் முன்னதாக கூறியபடி தலைவர் 171 படத்தின் சூட்டிங்கை லோகேஷ் துவங்கவுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X