லிங்குசாமி பட ஹீரோவுக்கு கழுத்தில் பலத்த காயம்... போட்டோவை பார்த்து பதறிய ரசிகர்கள்!
சென்னை : இயக்குனர் லிங்குசாமி இப்பொழுது தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ளார் ராம் பொத்தினேனியை வைத்து புதிய ஆக்சன் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
உப்பனா மூலம் கதாநாயகியாக அறிமுகமான கீர்த்தி ஷெட்டி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
ஐதராபாத்தில் விறுவிறுப்பாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது இந்த நிலையில் நடிகர் ராம் அவர்களுக்கு கழுத்தில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தெலுங்கில் படங்களை இயக்க
தமிழில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் லிங்குசாமி. ஆனந்தம், சண்டைக்கோழி, ரன், அஞ்சான், வேட்டை என இவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது. இந்த நிலையில் சமீபகாலமாக இவர் தமிழில் படங்களை இயக்குவதில் பல சிக்கல்களை சந்தித்து வந்தார் இந்த நிலையில் தெலுங்கில் படங்களை இயக்க முடிவு செய்துள்ளார்.

கீர்த்தி ஷெட்டி
எனவே தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகும் ஆக்சன் திரைப் படத்தை தற்போது இயக்கி வருகிறார். உப்பனா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை கீர்த்தி ஷெட்டி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

படப்பிடிப்பில் திட்டியதால்
பல முன்னணி நட்சத்திரங்கள் இத்திரைப்படத்தில் நடித்துவர இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அப்பொழுது கீர்த்தி ஷெட்டி சீரியஸான அழும் காட்சியில் சரியாக நடிக்கவில்லை என லிங்குசாமி திட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது இந்த செய்தி சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல பரவியது.

கழுத்தில் கட்டுடன் நடிகர் ராம்
இதையடுத்து ஒருவழியாக இருவரும் சமாதனம் ஆகி மீண்டும் படப்பிடிப்பு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த நிலையில் அடுத்ததாக பல ஆக்சன் காட்சிகள் எடுக்கப்பட உள்ளதால் அதற்காக நடிகர் ராம் ஜிம்மில் வொர்க் அவுட் செய்து தயாராகி வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்து காரணமாக கழுத்துப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு இப்பொழுது சிகிச்சை மேற்கொண்டுள்ளார். கழுத்தில் கட்டுடன் நடிகர் ராம் பொத்தினேனி எடுத்த புகைப்படத்தை இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளதை பார்த்த ரசிகர்கள் பதறிப்போய் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











