போலீஸ்னா போலீஸாவே மாறணும்... விதவிதமான துப்பாக்கிகளுடன் நடிகர் ராணாவுக்கு அதிரி புதிரி பயிற்சி

By

ஐதராபாத்: பிரபல நடிகர் ராணா, போலீஸ் அதிகாரி கேரக்டருக்காக முழுமையான பயிற்சி எடுக்கப் போகிறார் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் ராணா. இவர் தமிழில், ஆரம்பம், பெங்களூர் நாட்கள் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம், இவருக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் கிடைத்தனர்.

இந்தி படங்களில் நடித்துவரும் ராணா, சமீபத்தில் கவுதம் வாசுதேவ் மேனனின் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

உடல் நிலை

உடல் நிலை

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இவரது உடல் நிலை குறித்து பரபரப்பு தகவல்கள் வெளிவந்தன. அதற்கு இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட புகைப்படங்களே காரணம்.

நோயாளி போல

நோயாளி போல

மிகவும் ஒல்லியாக நோயாளி போல அவர் அதில் காட்சியளித்தார். இது அவரது ரசிகர்களை கவலையடைய செய்திருந்தது. இதனால் ரசிகர்கள் அவரது உடல்நலம் குறித்து விசாரித்து வந்தனர்.

கிட்னி பிரச்னை

கிட்னி பிரச்னை

அவருக்கு கிட்னி பிரச்னை என்றும் இதற்காக அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், இதுபற்றி அவரோ, அவரது குடும்பத்தினரோ எதுவும் தெரிவிக்க வில்லை.

மீண்டும் ரெடி

மீண்டும் ரெடி

இந்நிலையில் மீண்டும் படங்களில் நடிக்க ரெடியாகிவிட்டார் ராணா. இப்போது விரதபர்வம் 1992 என்ற படத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

சாய் பல்லவி

சாய் பல்லவி

அவர் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். வேணு உடுகுலா இயக்கும் இந்தப் படத்தில் நந்திதா தாஸ், பிரியாமணி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

ஸ்பெஷல் பயிற்சி

ஸ்பெஷல் பயிற்சி

இதற்கு முன் சில படங்களில் ராணா, போலீஸ் கேரக்டரில் நடித்திருந்தாலும் நிஜ போலீஸ் அதிகாரியாகவே மாற வேண்டும் என்பதற்காக, ஸ்பெஷல் பயிற்சி எடுக்க இருக்கிறார். தற்காப்பு, விதவிதமான துப்பாக்கிப் பயிற்சி, உடல் மொழி உட்பட அனைத்துவிதமான பயிற்சிகளையும் அவர் எடுக்க இருக்கிறார். ஓய்வு பெற்ற முன்னாள் போலீஸ் அதிகாரிகள் இந்தப் பயிற்சியை அவருக்கு அளிக்க உள்ளனர் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X