இதுக்கு மேல என்ன சீண்டி பாக்காதீங்க.. சாது மிரண்டால் காடு கொள்ளாது.. உணர்ச்சி வசப்பட்ட ரவிமோகன்!

சென்னை: நடிகர் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரிடமிருந்து விவாகரத்துக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடையே, ரவி மோகனின் குடும்ப வாழ்க்கையை கெடுத்ததே கெனிஷா என்று பரவலாகப் பேசப்பட்டு வந்தது. அதோடு மட்டுமில்லாமல், சமூக வலைதளங்களில் ஆர்த்திக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தவர்களுக்கு கெனிஷா பதிலடி கொடுத்து வந்தார்.

இதையடுத்து ஆர்த்தி, எந்த ஊடகத்திலும் தனக்கு எதிராக கெனிஷா கருத்துத் தெரிவிக்கக் கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கில்
ஆர்த்தி குறித்து பாடகி கெனிஷா எந்தவிதமான கருத்தையும் கூறக்கூடாது என நீதிபதி தடை விதித்தார். இதைத்தொடர்ந்து கெனிஷா தனது இன்ஸ்டாகிராமில் மன வேதனையுடன் ஒரு பதிவினை ஷேர் செய்து இருந்தார். இதைத்தொடர்ந்து, நேற்று பாடகி கெனிஷா இதற்கு மேல் என்னை நல்லவளாக நிரூபிக்க முயற்சி செய்ய மாட்டேன். இனிமேல் அமைதியாக விலகிச் செல்கிறேன் என ரவிமோகனை விட்டு விலகுவதாக அறிவித்து இருந்தார்.

Ravi Mohan Aarthi divorce
Photo Credit:

ரவி மோகன் பேட்டி: இதைத்தொடர்ந்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரவி மோகன், இது சினிமா தொடர்பான பேட்டி கிடையாது என் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான பேட்டி, நான் எந்த நெகட்டிவிட்டியையும் விரும்ப மாட்டேன். எந்த நடிகருடனும் எனக்கு போட்டி கிடையாது. அவருக்கு இவர், இவருக்கு அவர் என்று நான் ஒருபோதும் யாருடனும் போட்டி போட்டது இல்லை. நான் எப்போதும் என்னுடைய வழியில் தனியாக தான் இருந்திருக்கிறேன். அப்படிப்பட்ட என்னை இந்த நிலைக்கு தள்ளிவிட்டார்கள். இதற்கு மேல் நான் ஏன் அமைதியாக இருக்க வேண்டும்? இன்னும் நான்கு வீடியோ வேண்டுமானாலும் அவர்கள் போடட்டும். நான் பலாத்காரம் செய்தேன் என்று கூட சொல்லட்டும். ஆனால், என்னுடைய மனசு சுத்தமாக இருக்கிறது.

சீண்டி பாக்காதீங்க: இத்தனை நாள் நான் அமைதியாக இருந்தது மிகப்பெரிய முட்டாள்தனம் என்பதை இப்போது புரிந்து கொண்டேன். நான் அமைதியானவன் என்பதால் எதையும் ஏற்றுக்கொள்வேன் என்று நினைத்தார்கள். ஆனால், சாது மிரண்டால் காடு கொள்ளாது. இதுக்கு மேல என்னை சீண்டிப்பார்க்காதீர்கள். நிறைய பேர் என்னை சீண்டி பார்க்க முயற்சிக்கிறார்கள். யாராக இருந்தாலும் நேரடியாக வரட்டும், நான் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன் என்றார். தொடர்ந்து பேசிய ரவி மோகன், எனது விவாகரத்து பிரச்சனை முடிவுக்கு வரும் வரை என் படங்கள் எதுவும் வெளியாகாது. என்னால் நடிக்க முடிவில்லை. எனக்கு எப்போது விவாகரத்து கிடைக்கிறதோ, என் தனிப்பட்ட வாழ்க்கையில் நான் எப்போது நிம்மதியாக இருக்கிறோனோ, சமூக ஊடகங்கள் என்னைக்கு என்னை விமர்சிப்பதை நிறுத்துகிறதோ அன்னைக்கு நான் நடிக்க வருவேன் என ரவி மோகன் அந்த பேட்டியில் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு பேசி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X