Ravi Mohan: ஆண்கள் தான் பாவம்.. என்னை நிம்மதியா வாழவிடுங்க.. ரவி மோகன் இன்ஸ்டா போஸ்ட்!
சென்னை: விஜய், திரிஷா இருவரும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஜோடியாக சென்றதை அடுத்து, ரவி மோகனின் தனிப்பட்ட வாழ்க்கை மீண்டும் இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது. தற்போது ரவி மோகன் தனது இன்ஸ்டாகிராமில் என்னை நிம்மதியாக வாழ விடுங்க என பதிவிட்டுள்ளார்.
நடிகர் ரவி மோகன், மனைவி ஆர்த்தியை பிரிவாக 2024 ஆம் ஆண்டு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையை தொடர்ந்து நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து ஆர்த்தி ரவி, தன்னுடைய அனுமதி இல்லாமலேயே, ரவி மோகன் விவாகரத்து செய்யும் முடிவை எடுத்து இருப்பதாகவும், அவரை சந்தித்து பேச வேண்டும் என பதில் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

ரவிமோகன், கெனிஷா: இப்படி இவர்களின் பிரச்சனை சென்று கொண்டு இருக்க, ஐசரி கணேஷ் அவர்களின் மகள் திருமணத்தில் நடிகர் ரவி மோகன் தன்னுடைய தோழி கெனிஷாவுடன் கைகளை கோர்த்தபடி இருவரும் ஒரே நிறத்தில் உடை அணிந்து வந்திருந்தது பெரும் சர்ச்சையானது. ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா இருவரும் நெருக்கமாக இருப்பது சினிமா வட்டாரத்தில் பேசப்படும் பொருளாக மாறியது. இருவரும் இதுவரை தங்கள் உறவு பற்றி வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும், இசை நிகழ்வுகள், வெளிநாட்டுப் பயணங்கள், கோவிலுக்கு செல்வது என எதுவாக இருந்தாலும் சேர்ந்தே செய்து வருகின்றனர்.
வாழ விடுங்க: இந்நிலையில் ரவி மோகன் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவினை ஷேர் செய்துள்ளார். அதில், நான் அமைதியாக என் வாழ்க்கையை உருவாக்கிக்கொண்டிருக்கிறேன். பலர் பெண்கள் செய்வது தான் சரி என்று நினைக்கிறீர்கள் என்பதால், நான் இதை எழுதுகிறேன். ஆனால், பல நேரங்களில் ஆண்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். இதை நீதித்துறை கூட புரிந்துகொண்டிருக்கிறது. ஒருநாள் நீங்கள் அனைவரும் என் மனதையும், நான் நேசிக்கும் மக்களுக்காக என்ன செய்திருக்கிறேன் என்பதையும் புரிந்துகொள்வீர்கள். ஒரு மனிதன் அமைதியாக வாழ அனுமதியுங்கள், உங்க அருவருப்பான எண்ணங்களை உங்களிடமே வைத்துக்கொள்ளுங்கள். நான் என் பாதையில் சென்று கொண்டு இருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
ஜினி: இணையத்தில் ரவி மோகனின் இந்த பதிவு கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. தற்போது 'ஜினி' திரைப்படத்திலும், கரத்தே பாபு படத்தில் நடித்து முடித்துள்ளார். அதேபோல,கார்த்திக் யோகி கூட்டணியில் உருவாகும் 'புரோ கோட்' படத்தை ரவிமோகன் தயாரித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











