Ravi Mohan: அன்போட செய்யுங்க.. காதலர் தினத்தில் ரவி மோகன் கொடுத்த அட்வைஸ்!

சென்னை: நடிகர் ஜெயம் ரவிக்கு கடந்த ஆண்டு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்த படமும் பெரிதாக பெயர் சொல்லம் அளவிற்கு இல்லை. இதுமட்டுமில்லாமல் விவகாரத்து பிரச்சனை, கிசுகிசு சர்ச்சை என அடுத்தடுத்து சிக்கலில் சிக்கினார். அப்போது அவரின் கைவசம் ஜீனி, கராத்தே பாபு, பராசக்தி ஆகிய படங்கள் உள்னன.தற்போது ரவி மோகன் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ டிரெண்டாகி வருகிறது.

எடிட்டர் மோகனின் மகனான ரவி, தனது அண்ணன் இயக்கத்தில் உருவான ஜெயம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார் முதல் படமே மிகப்பெரிய வெற்றித்திரைப்படமான அமைந்ததைத் தொடர்ந்து தனது பெயருடன் ஜெயத்தை இணைத்துக்கொண்டு ஜெயம் ரவி என 20 ஆண்டுகளுக்கு மேலாக வலம் வந்தார். இதைத்தொடர்ந்து, போகிப்பண்டிகை என்று இன்ஸ்டாகிராமில் அறிக்கை வெளியிட்ட ஜெயம் ரவி இன்றில் இருந்து தன்னை ரவி மோகன் என அழைக்கும்படி ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

Ravi mohan instagram

நடிகர் ரவிமோகன்: இதைத் தொடர்ந்து, வெளியான காதலிக்க நேரமில்லை என்ற திரைப்படத்திர்ல ரவி மோகன் என்ற டைட்டில் கார்டுடன் தான் படம் வெளியானது. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ரவி மோகன் , நித்யா மேனன் நடித்த காதலிக்க நேரமில்லை படம்ஜனவரி 14 ஆம் தேதி வெளியானது. யோகி பாபு · லால் · வினய் ராய் · டி.ஜே. பானு · ஜான் கொக்கன் · வினோதினி வைத்திநாதன் , லக்ஷ்மி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். கலவையான விமர்சனத்தை பெற்ற இத்திரைப்படம் பிப்ரவரி 11ந் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது. தற்போது ரவி மோகன் ஜீனி, கராத்தே பாபு, பராசக்தி ஆகிய படங்களில் கைவசம் வைத்து இருக்கிறார். இதில் ஜீனி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது

அன்போட செய்யுங்க: இந்நிலையில், நடிகர் ரவி மோகன் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், 2025 ஆரம்பிச்சு ஒரு மாசம் ஓடிடுச்சி.. இல்லை, பறந்துடுச்சினுதான் சொல்லணும். இந்த வருஷம் நீங்க எது பண்ணாலும் நிம்மதியா பண்ணுங்க, சந்தோஷமா பண்ணுங்க, பொறுமையா பண்ணுங்க. எல்லாரும் சந்தோஷமா, நிம்மதியா இருப்பீங்கன்னு நம்புறேன். அதே மாதிரி இந்த வருஷம் எது செய்தாலும் அன்போட செய்யுங்க என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X