Ravi Mohan: மனக்காயங்களை மறந்து.. ஹாப்பி மூடில் ரவி மோகன்..நீச்சல் குளத்தில் தாறுமாறு போஸ்!
சென்னை: நடிகர் ரவி மோகன் தனது இன்ஸ்டாகிராமில் சில தினங்களுக்கு முன் ஆண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்ற பதிவினை பகிர்ந்து இருந்தார். தற்போது நீச்சல் குளத்தில் மகிழ்ச்சியாக ஆட்டம் போடும் வீடியோ பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் ரவி மோகன், தன் மனைவி ஆர்த்தியைப் பிரிந்து பாடகி கெனிஷாவுடன் வாழ்த்து வருகிறார். மேலும், தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கி அடுத்தடுத்து நான்கு படங்களைத் தயாரித்து வருகிறார். அதோடு மட்டுமில்லாமல், யோகி பாபுவை வைத்து 'ஆன் ஆர்டினரி மேன்' என்கிற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். மேலும், 'ஜினி' திரைப்படத்திலும், கரத்தே பாபு படத்திலும் நடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் வெளியாக உள்ளது.
நடிகர் ரவி மோகன்: ஆர்த்தியை விட்டு கெனிஷாவுடன் திருமணத்தில் கலந்து கொண்டது சினிமா வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியது. இருவரும் இதுவரை தங்கள் உறவு பற்றி வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும், இசை நிகழ்வுகள், வெளிநாட்டுப் பயணங்கள், கோவிலுக்கு செல்வது என எதுவாக இருந்தாலும் சேர்ந்தே செய்து வருகின்றனர்.

கூல் லுக்: இந்நிலையில் ரவிமோகன், நீச்சல் குளத்தில் மிதந்து கொண்டும், இயற்கையை ரசித்தபடி அமைதியான சூழலில், தண்ணீரில் படுத்தபடி ரிலாக்ஸாக இருக்கும் வீடியோவை பதிவிட்டுள்ளார். மேலும், நீச்சல் குளத்தில் சிரித்தபடி , மகிழ்ச்சியான மூடில் இருக்கும் காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரவி மோகன் பகிர்ந்து,"First you're weird. Then you're the blueprint" என பதிவிட்டுள்ளார். ரவி மோகனின் இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
ரசிகர்கள் மகிழ்ச்சி: ரவிமோகன், மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். தனது மனைவி ஆர்த்தி தன்னை ஒரு கணவனாக மதிக்காமல், 'பொன்முட்டையிடும் வாத்தாக' மட்டுமே பார்த்தார். பல ஆண்டுகளாக உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் கொடுமைப் படுத்தப்பட்டேன். என் பெற்றோரை கூட பார்க்க விடாமல் தனிமைப்படுத்தப்பட்டேன். விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு, நிதி நெருக்கடி, மனரீதியான பல பாதிப்புகளை சந்தித்ததாக தனது மனக்குமுறலை வெளிப்படுத்தி இருந்தார் ரவி மோகன். மன அழுத்தத்தில் இருந்து மீண்டு இருக்கும் ரவிமோகன், இயற்கையை ரசித்த படித்த நீச்சல் குளத்தில் அவர் மகிழ்ச்சியாக இருப்பதை பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும், இதே மகிழ்ச்சியோடு அவர் இருக்கட்டும் என அவரது ரசிகர்கள் கமெண்ட் பாக்ஸில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











