சத்தமே இல்லாமல் நடந்த ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதாவின் வளைகாப்பு.. வாழ்த்திய பிரபலங்கள்!
சென்னை: ரெடின் கிங்ஸ்லி சீரியல் நடிகை சங்கீதாவை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.பெங்களுரில் இவர்களின் திருமணம் மிகவும் எளிமையாக நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற நிலையில், சங்கீதாவின் வளைகாப்பும் சத்தமே இல்லாமல் நண்பர்கள் முன்னிலையில் நடந்துள்ளது. அந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.
தூத்துக்குடியை பூர்வீகமாக கொண்ட காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி, நடிகர் மட்டுமில்லாமல் சொந்தமாக பொருட்காட்சிகளை நடத்தி வருகிறார். நடிப்பு மீது இருந்த ஆர்வத்தால், டான்ஸ் கற்றுக்கொண்ட இவர் அஜித், சிம்ரன் நடிப்பில் வெளியான அவள் வருவாளா என்ற படத்தில் 'ருக்கு ருக்கு ருக்கு மணி' என்ற பாடலுக்கு க்ரூப் டான்சர்களில் ஒருவராக நடனமாடி உள்ளார். அந்த படத்தை தொடர்ந்து பல ஆண்டுகளாக திரைக்கு பின் இருந்த ரெடின் கிங்ஸ்லிக்கு நல்ல ஒரு ரோலை கொடுத்தது நெல்சன் தான்.

கோலமாவு கோகிலா: நயன்தாரா, யோகி பாபு நடிப்பில் வெளியான நகைச்சுவைத் திரைப்படமான கோலமாவு கோகிலா படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் கவனிக்கப்பட்டது. இதைத்தொடந்து எல்.கே.ஜி, குர்கா, சந்தானத்தின் ஏ1, ஜாக்பாட், நெற்றிக்கண் உள்ளிட்ட படங்களில் ரெடின் கிங்ஸ்லி நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் இவரை உச்சாணிக்கொம்பில் ஏற்றிவிட்டது. அந்த படத்தை தொடர்ந்து, விஜய்யின் பீஸ்ட், விஜய் சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல், நாய் சேகர் ரிடர்ன்ஸ், டிடி ரிட்டர்ன்ஸ், கட்டா குஸ்தி, அண்ணாத்த என தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார்.

காதல் திருமணம்: படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த ரெடின் கிங்ஸ்லி, தனது நீண்ட நாள் காதலியான சங்கீதாவை 2023ம் ஆண்டு பெங்களுர் கோவிலில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில், திருமணம் செய்துகொண்டார். இதைத்தொடர்ந்து ரெடின் கிங்ஸ்லியின் மனைவி சங்கீதா, தனது கணவருடன் ஜோடியாக ஜாலியாக ஹனிமூன் சென்ற போட்டோக்களை வெளியிட்டார். இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சங்கீதா அண்மையில் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான தகவலை தெரிவித்து இருந்தார்.

வளைகாப்பு: தற்போது சங்கீதா கிங்ஸ்லிக்கு சத்தமே இல்லாமல் வளைகாப்பு நடந்துள்ளது. சென்னையில் உள்ள பிரபல திருமண மண்டபத்தில் இந்த வளைகாப்பு நடந்துள்ளது. இதில் ஏராளமான சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு ஆரோக்கியத்துடன் குழந்தை பிறக்க வாழ்த்தி உள்ளனர். இந்த வளைகாப்பு போட்டோக்களை பழைய ஜோக்கு தங்கதுரை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 46 வயதான ரெடின் கிங்ஸ்லி கங்குவா படத்தில் நடித்திருந்தார். கடைசியாக இவர் நடிப்பில் ஸ்வீட் ஹார்ட் திரைப்படம் வெளியானது,
நடிகை சங்கீதா: நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸிலியின் மனைவி சங்கீதா, அரண்மனைக்கிளி, திருமகள், ஆனந்த ராகம், எங்க வீட்டு மீனாக்க்ஷி ஆகிய சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேபோல் வெள்ளித்திரையிலும், வீட்டுல விசேஷம், விசித்திரன், ஹே சினாமிகா, சுல்தான், பாரிஸ் ஜெயராஜ், கபடதாரி, மாஸ்டர் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நடிகை சங்கீதாவிற்கு 2009ம் ஆண்டு ஏற்கனவே திருமணமாகி இருந்த நிலையில், கருத்துவேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











