RJ Balaji: எல்கேஜி.. மூக்குத்தி அம்மன் 2ம் பாகம்.. ஆர்ஜே பாலாஜி உற்சாக அப்டேட்!
சென்னை: நடிகர் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான சிங்கப்பூர் சலூன் பரவலாக பாராட்டுக்களையும் வசூலையும் குவித்து வருகிறது. இந்தப் படத்திற்கு ஆர்ஜே பாலாஜி, இயக்குநர் கோகுல் உள்ளிட்டவர்கள் சிறப்பான பிரமோஷன்களை கொடுத்திருந்தனர். இதுவும் படம் ரசிகர்களை அதிகளவில் கவர காரணமாக அமைந்துள்ளது. இந்நிலையில் படத்தின் சக்சஸ் மீட்டை தற்போது படக்குழுவினர் நடத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் ஆர்ஜே பாலாஜி உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்று சிறப்பான பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டனர்.
முன்னதாக ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வெளியான எல்கேஜி மற்றும் மூக்குத்தி அம்மன் படங்கள் மிகச்சிறப்பான விமர்சனங்களை பெற்றன. இந்தப் படத்தில் காமெடி கலாட்டா செய்திருந்தார் ஆர்ஜே பாலாஜி. படத்தில் அரசியல் கலந்த கதைக்களத்தை கையில் எடுத்திருந்தார். மூக்குத்தி அம்மன் படத்தில் நடிகை நயன்தாரா அம்மனாக நடித்திருந்தார். இந்த இரு படங்களும் ரசிகர்களுக்கு சிறப்பான என்டர்டெயின்மெண்டை கொடுத்திருந்தது. இந்நிலையில் கோகுல் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான சிங்கப்பூர் சலூன் படத்தின் தன்னுடைய விருப்பத்தை துரத்தும் இளைஞனாக ஆர்ஜே பாலாஜி நடித்துள்ளார்.

நடிகர் ஆர்ஜே பாலாஜி: நடிகர் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது சிங்கப்பூர் சலூன். தன்னுடைய கனவை துரத்தும் இளைஞாக இந்தப் படத்தில் ஆர்ஜே பாலாஜி நடித்துள்ளார். இயக்குநர் கோகுல் கைவண்ணத்தில் ரிலீசாகியுள்ள இந்தப் படத்தில் சாதாரண கதைக்களத்தை எடுத்துக் கொண்டாலும் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய வகையில் படத்தின் ஸ்கிரிப்டை சிறப்பாக கொடுத்துள்ளார் கோகுல். படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும் முதல் வாரத்திலேயே பட்ஜெட்டை வசூலித்துள்ளது. இந்நிலையில் படத்தின் சக்சஸ் மீட்டை இன்றைய தினம் படக்குழுவினர் நடத்தியுள்ளனர்.
சிங்கப்பூர் சலூன் சக்சஸ் மீட்: இந்த சக்சஸ் மீட்டில் ஆர்ஜே பாலாஜி உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்று படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யங்களை பகிர்ந்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய ஆர்ஜே பாலாஜி, சமீபத்தில் வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படம் சிங்கப்பூர் சலூன் என்பதில் தனக்கு மிக்க மகிழ்ச்சி என்று உற்சாகம் தெரிவித்தார். மேலும் முன்னதாக வெளியான தனது படங்களான எல்கேஜி மற்றும் மூக்குத்தி அம்மன் படங்களின் இரண்டாவது பாகத்தை தான் உருவாக்க உள்ளதாகவும் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனலுடன் இணைந்து இந்தப் படங்களை உருவாக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நம்பிக்கை கொடுக்கும் படம்: மேலும் ரத்தம், கத்தி, வன்முறை நிறைந்த படங்கள் இந்தி உள்ளிட்ட மொழிகளில் நன்றாக ஓடிக் கொண்டிருக்கும்போது ஏதாவது செய்து வாழ்க்கையில் முன்னேறிவிடலாம் என ஒருவருக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் சிங்கப்பூர் சலூன் படம் திரைக்கு வந்துள்ளதாகவும் ஆர்ஜே பாலாஜி பெருமிதத்தை வெளிப்படுத்தியுள்ளார். படத்தின் இரண்டாவது பாதியில் நடித்து, படத்தின் வெற்றிக்கு காரணமான அரவிந்த் சாமிக்கும் அவர் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துள்ளார். படத்தை பார்க்கும் ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கையில் இப்படி நடக்காதா என்ற ஏக்கத்தை அவர் ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநருக்கு தங்கச் சங்கிலி: நிகழ்ச்சியில் பங்கேற்ற வேல்ஸ் இன்டர்நேஷனல் ஐசரி கணேஷ், படத்தின் இயக்குநர் கோகுலுடன் மீண்டும் இணைந்து புதிய படத்தை தயாரிக்கவுள்ளதாக தெரிவித்தார். விரைவில் படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்து அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். திரையரங்குகளில் பேமிலி ஆடியன்ஸ் அதிகமாக வருவதாக திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து வருவதாகவும் ஐசரி கணேஷ் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் படத்தை இயக்கிய கோகுலுக்கு பாராட்டு தெரிவித்து தங்கச்சங்கிலியை பரிசளித்தார்.


Click it and Unblock the Notifications











