RJ Balaji: சிங்கப்பூர் சலூன் படத்தில் பெரிய ஹீரோ நடிச்சிருக்காரு.. ஆர்ஜே பாலாஜி உற்சாகம்!
சென்னை: நடிகர் ஆர்ஜே பாலாஜி லீட் கேரக்டரில் நடித்து இயக்குநர் கோகுல் டைரக்ஷனில் உருவாகியுள்ள சிங்கப்பூர் சலூன் படம் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. வரும் ஜனவரி 25ம் தேதி இந்தப்படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் ஆர்ஜே பாலாஜியுடன் மீனாட்சி சவுத்ரி, லால், சத்யராஜ், ரோபோ சங்கர் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். விவேக் மெர்வின் இசையமைத்துள்ள இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம் நிறுவனம் தயாரித்துள்ளது. இன்னும் சில தினங்களில் ரிலீசாகவுள்ள இந்தப் படத்தின் சென்சார் தற்போது நிறைவடைந்துள்ளது.
முன்னதாக ரௌத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜூங்கா, அன்பிற்கினியாள் ஆகிய படங்களை இயக்கிய கோகுல் சிங்கப்பூர் சலூன் படத்தை இயக்கி முடித்துள்ளார். முன்னதாக ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் எல்கேஜி மூக்குத்தி அம்மன் போன்ற படங்களில் இணைந்துள்ளார் ஆர்ஜே பாலாஜி. இந்நிலையில் இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக சிங்கப்பூர் சலூன் படத்தில் இணைந்துள்ளது ரசிகர்களிடையே அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கூட்டணியில் இயக்குநர் கோகுலும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் சலூன் படம்: நடிகர் ஆர்ஜே பாலாஜி, எல்கேஜி, மூக்குத்தி அம்மன் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். கடந்த 2019ம் வெளியான இவரது ஹீரோ என்ட்ரி படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்த நிலையில், அடுத்ததாக இந்தக் கூட்டணியில் மூக்குத்தி அம்மன் படம் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மூன்றாவது முறையாக இந்த காம்பினேஷனில் தற்போது சிங்கப்பூர் சலூன் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. படம் வரும் 25ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யூ சான்றிதழ்: சிங்கப்பூர் சலூன் படத்தில் ஆர்ஜே பாலாஜியுடன் மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். மேலும் படத்தில் சத்யராஜ், லால், ரோபோ சங்கர், கிஷேன் தாஸ் உள்ளிட்ட பலரும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்தை பிரபல இயக்குநர் கோகுல் இயக்கியுள்ளார். படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை முன்னதாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், தற்போது படத்தின் சென்சார் மற்றும் ரன்டைம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. படத்திற்கு யூ சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும் படம் 2 மணிநேரம் மற்றும் 16 வினாடிகள் ரன்டைம் கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ரெட் ஜெயண்ட் மூவிஸ்: இந்தப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இந்தப் படம் தனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளதாக படத்தின் நாயகன் ஆர்ஜே பாலாஜி தெரிவித்துள்ளார். மக்களுக்கு தேவையான கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்ததாக இந்தப்படம் அமைந்துள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் துவக்கத்தில் நடிக்க மிகவும் சிரமமாக இருந்ததாகவும், ஆனால் படத்திற்காக கற்றுக் கொண்ட விஷயங்கள், தற்போது வரை தனக்கு உதவியாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னணி நடிகர்: மேலும் படத்தில் லோகேஷ் கனகராஜ், ஜீவா ஆகியோர் கேமியோ ரோலில் நடித்திருப்பதை சுட்டிக் காட்டிய ஆர்ஜே பாலாஜி, இது மட்டுமில்லாமல் படத்தில் மற்றொரு பெரிய சர்ப்ரைஸ் இருப்பதாகவும் படத்தில் மிகப்பெரிய ஹீரோ ஒருவர் நடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதை யாரென்று தற்போது கூற முடியாது என்றும் படத்தை பார்த்து, ரசிகர்கள் சர்ப்ரைஸ் ஆவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தப் படத்தில் அரசியல் பேசவில்லை என்றாலும் சமூக கருத்துக்களை மேலோட்டமாக கூறியுள்ளதாகவும் ஆர்ஜே பாலாஜி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











