சஞ்சய் தத்துக்கு மேலும் 2 வாரங்கள் பரோல் நீட்டிப்பு - நீதிமன்றம் உத்தரவு!!

By Shankar

Actor Sanjay Dutt gets 14 days parole extension
மும்பை: தனது பரோலை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என நடிகர் சஞ்சய் தத் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், அவர் கேட்டுக்கொண்ட படி கால நீட்டிப்பு செய்துள்ளது.

1993-ம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில், சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்தாக நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

சஞ்சய்தத் ஏற்கனவே 18 மாதம் ஜெயில் தண்டனை அனுபவித்துவிட்டதால், மீதியுள்ள 42 மாத கால தண்டனையை அனுபவிக்க சிறையில் அடைக்கப்பட்டார்.

முதலில் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் இருந்த அவர் பின்னர் பாதுகாப்பு கருதி புனே ஏர்வாடா மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். மருத்துவ காரணங்களுக்காக பரோலில் விடுவிக்க கோரி சஞ்சய்தத் கடந்த 1-ந் தேதி மனு செய்தார்.

இதை தொடர்ந்து அவர் 14 நாட்கள் பரோலில் விடுவிக்கப்பட்டார். அவரது பரோல் இன்றுடன் முடிந்தது.

நீட்டிப்பு

இந்த நிலையில் பரோலை மேலும் 2 வாரத்திற்கு நீட்டிக்க கோரி சஞ்சய்தத் மனுதாக்கல் செய்துள்ளார். மருத்துவ காரணங்களுக்காக நீட்டிக்குமாறு அவர் கேட்டிருந்தார்.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், உடல் நிலை காரணங்களுக்கு அவருக்கு மேலும் 14 நாட்கள் பரோல் நீட்டிப்பு செய்வதாக உத்தரவிட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X