ப்ளட்டுனா ரத்ததானம்...காமெடினா சந்தானம்... டைமிங்கில் ரைமிங்... ஹேப்பி பர்த்டே வாத்தியாரே!

சென்னை : நடிகர் சந்தானம் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் பலரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிறந்த நாளான இன்று ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

சந்தானம்

சந்தானம்

ஒவ்வொரு நடிகர்களும் ஒவ்வொரு ஸ்டைல் வைத்து இருப்பார்கள் அப்படி தனக்கென தனி ஸ்டைல்... தனி பாடி லாங்குவேஜ்... நையாண்டி... டைமிங் காமெடி என ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப்பிடித்தவர் சந்தானம்.

லொள்ளு சபா

லொள்ளு சபா

விஜய் தொலைக்காட்சி எத்தனையோ திறமைசாலிகளை திரையில் மின்னவைத்துள்ளது. அப்படி நமக்கு கிடைத்து ஒரு முத்துதான் சந்தானம். விஜய்தொலைக்காட்சியில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் நையாண்டி, டைமிங் காமெடி என அதிரிபுதிரி செய்து மக்களின் மனதில் இடம் பிடித்தார் சந்தானம்.

வெள்ளித்திரையில் ஜொலித்தார்

வெள்ளித்திரையில் ஜொலித்தார்

நாகேஷ், கவுண்டமணி, செந்தில், வடிவேலு என அசாத்திய கலைஞர்கள் தமிழ் திரையில் எப்படி அலங்கரித்தார்களோ அப்படி அலங்கரிக்க மன்மதன் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் ஜொலித்தார். அவரின் நகைச்சுவையே தனிபாணி என்பதால் நகைச்சுவை நடிகர் எந்தஅந்தஸ்தை பெற்றார்.

நகைச்சுவையின் உச்சம்

நகைச்சுவையின் உச்சம்

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, தீயா வேலை செய்யணும்குமாரு, என்றென்றும் புன்னகை, ராஜா ராணி, வணக்கம் சென்னை, ஆல் அன்ஆல் அழகு ராஜா போன்ற திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடத்தைப்பிடித்தார். ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் 'சாகப்போற நேரத்துல தேங்காய் எண்ணெய வெச்சிக்கிட்டு நாங்க என்ன பண்றது?' என்ற சந்தானம் கேட்டது எப்போது கேட்டாலும் சிரிப்பை வரவைக்கும்.

ஹீரோவாக

ஹீரோவாக

நகைச்சுவை நடிகராக வலம் வந்த சந்தானம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படத்தில் ஹீரோ அவதாரம் எடுத்தார். காமெடியனாக இருந்தாலும் சரி, ஹீரோவாக இருந்தாலும் சரி, நொடிக்கு நொடி கவுண்டர் வசனம் பேசுவதை தனது ஸ்டைலாக மாற்றிக்கொண்டு, இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2, ஏ1, டகால்டி, பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, சபாபதி ஆகிய திரைப்படங்களில் ஹீரோவா நடித்துள்ளார்.

Recommended Video

Santhanam Speech About Jaibhim | சூர்யாவுக்கு சந்தானம் அறிவுரை, Suriya
இன்று பிறந்தநாள்

இன்று பிறந்தநாள்

நடிகர் சந்தானம் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சந்தானத்தின் பிறந்த நாளான இன்று "ஏஜென்ட் கண்ணாயிரம்" என்ற திரைப்படத்தின் டீசரைபடக்குழு வெளியிட்டுள்ளது. இத்திரைப்படம், தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேய என்ற திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X