அந்த ராமசாமி நான் இல்ல.. வாய் இருக்குனு இப்படியா பேசுவது.. சர்ச்சையில் சிக்கிய சந்தானம்!

சென்னை: டிக்கிலோனா திரைப்படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து சந்தானம் மற்றும் இயக்குனர் கார்த்திக் யோகி மீண்டும் வடக்குபட்டி ராமசாமி படத்துக்காக இணைந்துள்ளனர். இப்படம் பிப்ரவரி இரண்டாம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்தை ப்ரோமோட் செய்யும் வகையில் சந்தானம் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ தான் தற்போது அவரை சிக்கலில் சிக்கவைத்துள்ளது.

டிக்கிலோனா படத் தொடர்ந்து கவுண்டமணியின் பிரபல காமெடியை நியாபகப்படுத்தும் விதமாக வடக்குப்பட்டி ராமசாமி என்ற வார்த்தையைத் தலைப்பாக வைத்து படப்பிடிப்பைத் தொடங்கினர். நகைச்சுவையும் மையமாக வைத்து உருவாகும் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இடைவெளி இல்லாமல் நடைபெற்று வந்தது.

actor santhanam deleted the video about periyar amid controversy

பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

சர்ச்சையில் சிக்கிய சந்தானம்: வடக்குப்பட்டி படம் பிப்ரவரி இரண்டாம் தேதி வெளியாக உள்ள நிலையில், இத்திரைப்படத்தை ப்ரோமோட் செய்யும் வகையில் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ, ஈவெ ராமசாமியை கிண்டல் அடிக்கும் வகையில் இருந்தது. இந்த சாமியே இல்லைன்னு ஊருக்குள்ள சொல்லிட்டு திரிஞ்சியே அந்த ராமசாமிதானே நீ என்று ஒருவர் கேட்க சந்தானமே, பொறுமையாக சாமிக்கு கற்பூரம் ஏற்றி நான் அந்த ராமசாமி இல்லை என்று சொல்லி கற்பூரத்தை காட்டி உள்ளார்.

சந்தனம் தீய சக்தி: இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டான நிலையில், திமுக மற்றும் பெரியார் இயக்கத்தினர் சந்தானத்தை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இணையத்தில் இந்த பதிவிற்கு கடும் விமர்சனம் வந்ததை அடுத்து, இந்த பதிவை சந்தானம் டெலிட் செய்துள்ளார். அவர் அந்த பதிவினை நீக்கிவிட்டாலும், அதன் ஸ்க்ரீன் ஷாட் மற்றும் வீடியோ தற்போதும் வைரலாகி வருகிறது. அது மட்டுமில்லாமல் பிடிஆர் பழனிவேல் ராஜன் சந்தானம் குறித்துத் பேசிய பழைய வீடியோ ஒன்றை நெட்டிசன்கள் வைரலாக்கி உள்ளார். அதில், அவர் ஜக்கி வாசுதேவன், சந்தானம் போன்றவர்கள் தீய சக்தியாக நான் பார்க்கிறேன். அவர்கள் மத நல்லிணக்கத்தை உடைத்துத் சமுதாயத்தில் மத கலவரத்தை உருவாகும் தீய சக்திகள் என்று பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X