புலி வாலை பிடித்த சந்தானம்.டேய்.. கைய வச்சிகிட்டு சும்மா இருப்பா.. கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை : நடிகர் சந்தானம் புலியின் பக்கத்தில் ஜாலியாக அமர்ந்து அதன் வாலை பிடித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஒவ்வொரு நடிகர்களும் ஒவ்வொரு ஸ்டைல் வைத்து இருப்பார்கள் அப்படி தனக்கென தனி ஸ்டைல், தனி பாடி லாங்குவேஜ், நையாண்டி, டைமிங் காமெடி என ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்தவர் சந்தானம்.

நாகேஷ், கவுண்டமணி, செந்தில், வடிவேலுவுக்கு அடுத்த படியாக சந்தானம் வெள்ளித்திரையில் ஜொலித்தார்.

கலக்கல் காமெடியன்

கலக்கல் காமெடியன்

சிம்பு நடித்த மன்மதன் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரியான சந்தானத்தின் ஸ்டைல் அனைவருக்கும் பிடித்துப்போக ஏராளமான படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்தார். சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, தீயா வேலை செய்யணும் குமாரு, என்றென்றும் புன்னகை, ராஜா ராணி, வணக்கம் சென்னை, ஆல் அன்ஆல் அழகு ராஜா போன்ற திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தார்.

ஹீரோ அவதாரம்

ஹீரோ அவதாரம்

நகைச்சுவை நடிகராக வலம் வந்த சந்தானம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படத்தில் ஹீரோ அவதாரம் எடுத்தார். காமெடியனாக இருந்தாலும் சரி, ஹீரோவாக இருந்தாலும் சரி, நொடிக்கு நொடி கவுண்ட்டர் வசனம் பேசுவதை தனது ஸ்டைலாக மாற்றிக்கொண்டு, இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2, ஏ1, டகால்டி, பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, சபாபதி, ஏஜெண்ட் கண்ணாயிரம் திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

புலி தூங்குதா?

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சுற்றுலா சென்றுள்ள, சந்தானம் ஜூவில் புலியுடன் ஜாலியாக இருக்கும் வீடியோவை டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். நீச்சல் குளம் அருகில் அமர்ந்திருந்த சந்தானம் அருகில் இருக்கும் புலியின் வாலை கையில் பிடித்து புலி தூங்குதா என்று கேட்க, அருகில் இருந்த பூங்கா ஊழியர் புலியின் தலையை குச்சியால் தட்டி தட்டி எழுப்புகிறார். அப்போது புலி உறுமுகிறது. அதைப் பார்த்து சந்தானம் லேசாக அதிர்ச்சி அடைகிறார்.

கைய வச்சிகிட்டு சும்மா இருடா

கைய வச்சிகிட்டு சும்மா இருடா

ஒருவித மயக்கத்தில் இருக்கும் புலியை தடவி கொடுக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பணத்துக்காக கொடிய மிருகங்களை ஜூவில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதே தவறு அதில், குச்சியை வைத்து தாக்கலாமா என்றும் கேட்டு வருகின்றனர். மேலும், ஒரு சில ரசிகர்கள் டேய்..கைய வச்சிகிட்டு சும்மா இருடா என்று கிண்டலடித்து கமெண்டுகளை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X