Actor Santhanam: வடக்குப்பட்டி ராமசாமி.. சந்தானம் பாடிய பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்!

சென்னை: நடிகர் சந்தானம் லீட் கேரக்டரில் நடித்துள்ள வடக்குப்பட்டி ராமசாமி படத்தை இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கியுள்ளார். முன்னதாக சந்தானம் -கார்த்திக் யோகி கூட்டணி டிக்கிலோனா படத்தில் இணைந்திருந்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. பீபிள் ஃபிலிம் பேக்டரி தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். முன்னதாக படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் இன்றைய தினம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது.

முன்னதாக ட்ரெயிலர் வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. இதற்கான விளக்கத்தையும் இயக்குநர் கொடுத்திருந்தார். இந்நிலையில் இந்தப் படம் வரும் பிப்ரவரி 2ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதையொட்டி படத்தின் பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். படத்தில் ஜான் விஜய், எம்எஸ் பாஸ்கர், ரவி மரியா, மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, ஜாக்குலின் உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் தற்போது படத்தின் ஆபராக்கோ டாபராக்கோ என்ற முதல் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் பாடலை நடிகர் சந்தானம் பாடியுள்ளார்.

Actor Santhanam sings Vadakkupatti Ramasamy movie first single and the song released

நடிகர் சந்தானம்: நடிகர் சந்தானம், மேகா ஆகாஷ், எம்எஸ் பாஸ்கர், ஜான் விஜய், ரவி மரியா, மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, ஜாக்குலின் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள வடக்குப்பட்டி ராமசாமி படம் வரும் பிப்ரவரி 2ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின்மூலம் சந்தானம் -கார்த்திக் யோகி கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. முன்னதாக டிக்கிலோனா என்ற படத்தில் இணைந்திருந்த இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களை படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

வடக்குப்பட்டி ராமசாமி படம்: அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் ட்ரெயிலர் வெளியானது. இதில் இடம்பெற்றிருந்த ஒரு டயலாக் கடுமையான விமர்சனங்களை சந்தித்திருந்தது. இதுகுறித்து இயக்குநர் கார்த்திக் யோகி விளக்கமளித்திருந்தார். படத்தின் ஒரு டயலாக்கை மட்டும் வைத்துக் கொண்டு படத்தை எடை போடக்கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட்டுள்ளது. ஆபராக்கோ டாபராக்கோ என்ற இந்தப் பாடலை படத்தின் நாயகன் சந்தானம் பாடியுள்ளார். படத்திற்கு ஷான் ரோல்டன் இசைமைத்துள்ள நிலையில் தற்போது வெளியாகியுள்ள பர்ஸ்ட் சிங்கிள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

கதை இதுதான்: காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படமும் சந்தானத்திற்கு சிறப்பாக கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் படம் 1974ம் காலகட்டத்தையொட்டி எடுக்கப்பட்டுள்ளதாக முன்னதாக பேட்டியொன்றில் இயக்குநர் கார்த்திக் யோகி தெரிவித்துள்ளார். அந்த காலகட்டத்தில் மெட்ராஸ் ஐ பரவியபோது அதை மக்கள் எப்படி எதிர்கொண்டனர் என்பதை நகைச்சுவை கலந்து எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்தில் பானை செய்பவராக சந்தானம் நடித்துள்ளார். மேகா ஆகாஷ் டாக்டராக நடித்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து 63 நாட்கள் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.

என்டர்டெயின்மெண்ட் படம்: மேலும் படம் முழுக்க முழுக்க என்டர்டெயின்மென்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாகவும் எந்த இடத்திலும் அரசியல் இருக்காது என்றும் கார்த்திக் யோகி தெரிவித்துள்ளார். மேலும் படத்தில் யாரையும் புண்படுத்தும்வகையில் காட்சிகள் இல்லை என்றும் சர்ச்சைக்குரிய காட்சிகள் எதையும் இதில் பயன்படுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். படத்தில் ஒரு ட்விஸ்ட் உள்ளதாகவும் அது படம் பார்க்கும் ரசிகர்களை அதிகமாக கவரும் என்றும் கார்த்திக் யோக கூறியுள்ளார். இந்தப் படத்தை முன்னதாக பார்த்த உதயநிதியும் படம் குறித்து பாராட்டு தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X